கோரமண்டல் ரயில் விபத்து.. எந்த எண்களை தொடர்பு கொண்டு தகவல்களை பெற வேண்டும்! அவசர உதவி எண் அறிவிப்பு
சென்னை: கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் விரைவு ரயில் விபத்தில் சிக்கியுள்ள நிலையில், மீட்புப் பணிகள் விரைவாக நடந்து வருகிறது. இதற்கிடையே விபத்து குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள அவசர எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்த கோரமண்டல் விரைவு ரயில் (12841) வழக்கம் போல கொல்கத்தாவில் இருந்து கிளம்பியுள்ளது. அனைத்தும் எப்போதும் போலவே இருந்துள்ளது.
ஒடிசாவில் பாலசோர் மாவட்டத்தில் வரும் போது தான் விரைவு ரயில் மோசமான ஒரு விபத்தில் சிக்கியுள்ளது. கோரமண்டல் ரயில் பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே வந்த போது தடம் புரண்டுள்ளது.

பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே இந்த விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், சுமார் 7 பெட்டிகள் தடம் புரண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பான போட்டோ மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தடம் புரண்ட பெட்டிகளில் சில பெட்டிகள் பக்கத்தில் இருந்த பாதையில் விழுந்த நிலையில், அவையும் தடம் புரண்டுள்ளன. மேலும் லூப் டிராகில் இருந்த சரக்கு ரயிலும் இந்த விபத்தில் சிக்கியுள்ளன.
இது குறித்த தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், காயமடைந்தவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று, காயம் அடைந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.
இருப்பினும், இரவு நேரம் என்பதாலும் வனப்பகுதி என்பதாலும் மீட்புப் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்த விபத்தில் 70 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பல பெட்டிகள் தடம் புரண்டுள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ரயில் விபத்தில் காயமடைந்தோருக்கு உரியச் சிகிச்சை அளிக்கவும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஒடிசா ரயில் விபத்து குறித்து அவசர கட்டுப்பாட்டு அறையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. விபத்து குறித்து தகவல்களை 91 67822 62286 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளளவும் என்று ஒடிசா அரசு அறிவித்துள்ளது.
அதேபோல கோரமண்டல் விரைவு ரயில் விபத்து குறித்து தெற்கு ரயில்வேவும் உதவி எண்களை அறிவித்துள்ளது. 044-25354771 என்ற எண்ணில் தொடர்புகொண்டு விபரங்களைக் கேட்கலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த ரயில் விபத்திற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க ஒடிசா அரசு மற்றும் தென்கிழக்கு ரயில்வேயுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறோம்" என்று தெரிவித்துள்ளார். மேலும், மேற்கு வங்க அரசு சார்பிலும் அவசரக்கால கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 033- 22143526/ 22535185 என்ற எண்களில் தொடர்பு கொண்டு ரயில் விபத்து குறித்த தகவல்களைக் கேட்டறியலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல இந்த ரயில் விபத்து தொடர்பாகத் தமிழ்நாடு அரசு உதவி எண் அறிவித்துள்ளன. 044 2859 3990, 94458 69843 ஆகிய தொலைப்பேசி எண்களில் தகவல் அறியலாம். மேலும், ரயில் விபத்து தொடர்பாக உதவி பெற 94458 69848 என்ற வாட்ஸ் அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் அவசர உதவி எண்களாகப் பெங்களூர்- 080-22356409, பங்கார்பேட்டை: 08153 255253, குப்பம்- 8431403419, SMVB : 09606005129, கேஜிஎம்:+91 88612 03980 ஆகிய எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் ஹவுரா 033- 26382217, கரக்பூர்- 8972073925, 9332392339, பாலாசோர்- 8249591559, 7978418322, ஷாலிமார்- 9903370746, சென்னை சென்டிரல் 044- 25330952, 044- 25330953 உள்ளிட்ட எண்களைத் தொடர்பு கொண்டும் தேவையான தகவல்களைக் கேட்டறியலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications