மெல்ல உயரும் கொரோனா... உலகம் முழுவதும் ஒரே நாளில் 740,209 பேர் பாதிப்பு
உலகம் முழுவதும் கொரோனாவால் 52,63,57,459 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து 49,60,95,400 பேர் மீண்டுள்ளனர். கொரோனாவால் உலகம் முழுவதும் 62,98,575 பேர் உயிரிழந்துள்ளனர்.
மும்பை: உலகம் முழுவதும் கொரோனாவால் 52,63,57,459 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து 49,60,95,400 பேர் மீண்டுள்ளனர். கொரோனாவால் உலகம் முழுவதும் 62,98,575 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகம் முழுவதும் 38,273 பேர் கவலைக்கிடமான வகையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சீனாவின் வூகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டுகளில் கொரோனா டெல்டா, டெல்டா ப்ளஸ் அதிக அளவில் மக்களின் உயிரை காவு வாங்கியது. ஓமிக்ரான் வைரஸ் பரவல் வேகம் அதிகமாக இருந்தாலும் அதிக அளவில் உயிர் பலி ஏற்படவில்லை. தற்போது XE என்ற புதிய வகைக் கொரோனா பரவி வருகிறது.

Recommended Video
கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. சீனாவில் கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா பாதிப்பு தொடங்கியதிலிருந்து ஷாங்காய் நகரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளதால் பலகோடி மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல், உணவு, மருத்துவ உதவி, அடிப்படைவசதிகளுக்கு கூட மிகவும் சிரமப்படுகிறார்கள். வடகொரியா, தென்கொரியாவில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 740,209 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 52,63,57,459 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து உலகம் முழுவதும் ஒரே நாளில் 7,43,890 பேர் மீண்டுள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 49,60,95,400 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உலகம் முழுவதும் 1,262 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் மரணமடைந்தவர்களளின் மொத்த எண்ணிக்கை 62,98,575 பேராக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா கட்டுப்பாடுகள் முற்றிலும் தளர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்று மீண்டும் மெல்ல அதிகரித்து வருகிறது. 2,510 பேர் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,31,34,332 பேராக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் கொரோனா மீண்டும் அதிகரித்து வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 91,382 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 8,49,24,394 பேராக அதிகரித்துள்ளது. கொரோனாவால் மொத்தம் 10,28,710 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரான்ஸ் நாட்டில் 24,332 பேர் புதிதாக ஒரே நாளில் கொரேனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜெர்மனியில் 40,651 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்கொரியாவில் ஒரே நாளில் 25,108 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலி நாட்டில் 26,561 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
ஓமிக்ரான் வைரஸ் மட்டுமே கடைசி கொரோனா இல்லை என்றும் கொரோனாவில் இருந்து தப்பிக்க தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என்றும் உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் பல நூறு கோடி மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.
ஜூன் மாதத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்றும், 4வது அலை உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதால் பல நாடுகளில் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications