சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

17 மாதங்களில் இல்லாத அளவுக்கு மும்பையில் தொற்று குறைவு.. பெரும் சாதனை.. மகிழும் மக்கள்

Google Oneindia Tamil News

சென்னை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 17 மாதங்களில் இல்லாத அளவுக்கு நேற்றைய தினம் தொற்று குறைந்தது.

கொரோனா 2-ஆவது அலை கட்டுக்குள் இருக்கும் நிலையில் மூன்றாவது அலை தொடக்கத்தில் உள்ளதாக மருத்துவர்கள் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் 24 மணி நேரத்தில் எடுத்த கொரோனா டெஸ்ட், பாசிட்டிவிட்டி ரேட், நெகட்டிவ் ரிசல்ட், பாசிட்டிவ் ரிசல்ட், கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் குறித்த விவரங்களை அந்தந்த மாநில அரசு வெளியிடுகிறது.

Corona cases in Mumbai are declined yesterday

இந்த தரவுகளை வைத்து அடுத்த மத்திய அரசு ஒட்டுமொத்தமாக இந்தியாவில் கொரோனா வைரஸ் குறித்து வெளியிடுகிறது. இந்த நிலையில் இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருப்பதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் புதிதாக 14ஆயிரத்து 313 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 39 லட்சத்து 85 ஆயிரத்து 920 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2 லட்சத்து 14 ஆயிரத்து 900 ஆகக் குறைந்துவிட்டது. கடந்த 224 நாட்களில் இல்லாத அளவுக்கு கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 12 ஆயிரத்து 447 பேர் சிகிச்சையிலிருந்து குணமடைந்து சென்றுள்ளனர்.

கொரோனாவிலிருந்து இதுவரை 3 கோடியே 33 லட்சத்து 20 ஆயிரத்து 57பேர் குணமடைந்துள்ளனர்.
ஒட்டு மொத்த பாதிப்பில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 0.63 சதவீதமாகக் குறைந்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பின் மிகக் குறைவாகும். தொடர்ந்து 18-வது நாளாக கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 30 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

Corona cases in Mumbai are declined yesterday

கடந்த ஒரே நாளில் 11.81 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதன் மூலம் இதுவரை 58.50 கோடி சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்குள்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவில் 181 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் இதுவரை 4.50 லட்சம் பேர் கொரோனாவுக்கு பலியாகிவிட்டனர்.

கொரோனா தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை 95.89 கோடியைக் கடந்துள்ளது. இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பில் டாப்பில் இருக்கும் மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையில் கடந்த 17 மாதங்களுக்கு பிறகு நேற்றைய தினம் கொரோனா தொற்று குறைந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்றைய தினம் 1,736 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மாநிலத்தில் கொரோனாவால் இதுவரை 65.79 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மும்பையில் 410 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

மகாராஷ்டிராவில் ஆட்சியில் இருக்கும் சிவசேனா இந்த கொரோனா தொற்றை குறைப்பதற்கு பல்வேறு போராட்டங்களை செய்துள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசியை அதிகரித்து வழங்குமாறு கோரி மத்திய அரசுடன் மோதல் போக்கையும் கொண்டிருந்தது. இந்த நிலையில் மும்பையில் தொற்று குறைந்துள்ளது பெரும் சாதனையாகவே பார்க்கப்படுகிறது.

குறையும் பாதிப்பு.. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,183 பேருக்கு கொரோனா.. 3ம் அலை வருமா? குறையும் பாதிப்பு.. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,183 பேருக்கு கொரோனா.. 3ம் அலை வருமா?

English summary
Corona cases in Mumbai are declined yesterday after 17 months. People are happy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X