தமிழகத்தில் 17 மாவட்டங்களில் மோசமான நிலைமை.. ஒரே நாளில் 27,397 பேருக்கு கொரோனா!
சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 27,397 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,51,362 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இன்று மிகப்பெரிய உச்சமாக ஒரே நாளில் 27,397 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,51,362 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 241 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 15,412 ஆக உயர்ந்துள்ளது.

குணமடைந்தவர்கள்
தமிழகத்தில் இன்று கொரோனாவில் இருந்து 23,110/ பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை மீண்டவர்களின் எண்ணிக்கை 11,96,549 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்புடன் 1,39,401 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்,

செங்கல்பட்டில் 2458 பேர் பாதிப்பு
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் இன்று கொரோனா தொற்றால் 6846 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 2458 பேரும், கோவையில் 2117 பேரும், திருவள்ளூரில் 1284 பேரும், மதுரையில் 1217 பேரும், காஞ்சிபுரத்தில் 906 பேரும், தூத்துக்குடியில் 853 பேரும், தஞ்சாவூரில் 857 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சேலத்தில் 550 பேர் பாதிப்பு
திருச்சியில் 820 பேரும், திருநெல்வேலியில் 674 பேரும், சேலத்தில் 550 பேரும், ஈரோட்டில் 779 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவள்ளூர் உள்பட 17 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஒரே நாளில் 500 பேருக்கு மேல் ஏற்பட்டுள்ளது. எல்லா மாவட்டங்களிலும் 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருவள்ளூரில் 17 பேர் மரணம்
கொரோனா தொற்றால் சென்னையில் ஒரே நாளில் 72 பேர் மரணம் அடைந்துள்ளனர், திருவள்ளூரில் 17 பேர், காஞ்சிபுரத்தில் 14 பேர், திருச்சியில் 12 பேர், திருப்பத்தூரில 11 பேர், சேலம் மற்றும் செங்கல்பட்டில் 10 பேர், மதுரை, தஞ்சாவூரில் தலா 7 பேரும், கடலூரில் 9 பேரும், வேலூர், விழுப்புரம், விருதுநகரில் தலா 5பேர் கொரோனா தொற்றால் மரணம் அடைந்துள்ளனர்.
-
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை!












Click it and Unblock the Notifications