கொரோனா தொற்று பரவல்: 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒத்தி வைப்பு: மத்திய அமைச்சர் தகவல்
2019 ஆம் திட்டமிடப்பட்ட 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு கொரோனா தொற்று பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பும், அது தொடர்பான கள நடவடிக்கைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்று மக்களவையில் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு மக்களவையில் கேள்வி
2021 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதா? அவ்வாறெனில் எப்போது நடக்கும் என்பது குறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்தா ராய் பதில் அளித்தார்.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பை பாதித்த கொரோனா பேரிடர்
அவர் பதில் அளித்து பேசுகையில், " 2021ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படுவது குறித்து கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய அரசு அரசாணை வெளியிட்டது. ஆனால் இந்தியா முழுவதும் பரவிய கொரோனா பேரிடர் காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பும் அது தொடர்பான கள நடவடிக்கைகளும் ஒத்திவைக்கப்பட்டது.

எவ்வாறு நடக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்காக இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களிலிருந்து 372 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது முறையான தகவலைப்பெற அந்தந்த மாநில மக்களின் தாய் மொழி தெரிந்தவர்கள், பிற இரு மொழிகள் தெரிந்தவர்களும் உடன் சென்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுவார்கள்" எனத் தெரிவித்தார்.
Recommended Video

மூன்றாவது அலைபரவல் வருமா?
மூன்றாவது அலை 2022 பிப்ரவரியில் தொடங்கும் என ஐஐடி ஆய்வு தகவல் வெளியான நிலையில் ஒமிக்ரான் வைரஸ் பரவி வரும் நிலையில்வரும் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி எந்த அளவுக்கு இருக்கும் என்பது போகபோகத்தெரியும். இந்நிலையில் பீஹாரில் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படுவது குறித்து பீஹார் முதல்வர் 2 நாட்களுக்கு முன் ஆலோசனை நடத்தியுள்ளார். தமிழகத்திலும் அத்தகைய கோரிக்கைகள் அரசியல் கட்சிகளால் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications