சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சுகர், பிபி, தைராய்டுடன் கொரோனாவும் வந்துவிட்டால் பயப்படாதீங்க.. சித்த மருத்துவம் இருக்கு.. வீரபாபு

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனாவுக்கு சிகிச்சை பெற சித்த மருத்துவ முகாம்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது. இந்த நிலையில் சென்னை சாலிகிராமத்தில் ஜவஹர் பொறியியல் கல்லூரியில் சித்த மருத்துவ முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இங்கு தினமும் ஏராளமான கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக குவிகிறார்கள். இந்த சித்த மருத்துவ முகாம் கடந்த ஜூன் மாதம் 3-ஆம் தேதி தொடங்கியது. தொடக்கத்தில் 50 முதல் 70 பேர் வரை மட்டுமே சிகிச்சை பெற்று வந்தார்கள்.

உதவியாளருக்கு கொரோனா உறுதி - தனிமைப்படுத்திக் கொண்ட ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உதவியாளருக்கு கொரோனா உறுதி - தனிமைப்படுத்திக் கொண்ட ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

படுக்கை வசதி

படுக்கை வசதி

ஆனால் தற்போது இங்கு நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த மருத்துவ முகாம் குறித்து சித்தா டாக்டர் வீரபாபு செய்தியாளர்களிடம் கூறுகையில் ஜூன் 3-ஆம் தேதி 250 படுக்கைகளுடன் தொடங்கிய இந்த மருத்துவ முகாமில் மக்கள் வருகையும் அதிகமாக உள்ளது. இதனால் தற்போது 465 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.

நோயின் தன்மை

நோயின் தன்மை

மேலும் படுக்கை வசதியை அதிகரிக்க போதிய இடவசதி இல்லாததால் அதிகரிக்க முடியவில்லை. இங்கு காய்ச்சலுக்கு மட்டும் பாராசிட்டாமல் மருந்து கொடுக்கப்படுகிறது. இது தவிர கபசுர குடிநீர், சிறப்பு மூலிகை தேனீர், நோயாளியின் தன்மைக்கு ஏற்ப ஏனைய சித்த மருந்துகளும் கொடுக்கப்படுகின்றன.

குணமடைதல்

குணமடைதல்

பொதுவாக நாட்பட்ட நோய் உள்ளவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் போது அவர்கள் உயிரிழக்க நேரிடுகிறது. ஆனால் இங்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், தைராய்டு, சிறுநீரக பாதிப்பு போன்ற நோய்கள் உள்ளவர்களும் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பி வருகிறார்கள்.

462 நோயாளிகள்

462 நோயாளிகள்

எனவே எந்த நாட்பட்ட நோய்கள் இருந்தாலும் இங்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படும். இதுவரை இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டவர்களில் யாரும் உயிரிழக்கவில்லை. இங்கு ஏராளமான போலீஸ் அதிகாரிகள் முதல் அரசு உயரதிகாரிகள் வரை சிகிச்சை பெற்று திரும்பியுள்ளார்கள். இதுவரை 2,425 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 1,963 பேர் இதுவரை குணமடைந்துள்ளார்கள். தற்போது வெறும் 462 நோயாளிகள் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றார் வீரபாபு.

English summary
Most of the corona patients gathered in Chennai Saligram's Siddha Medical Camp.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X