Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் பரவும் கொரோனா..திருச்சியில் இளைஞர் உயிரிழந்தது எப்படி? மா.சுப்ரமணியன் அறிக்கை

திருச்சியில் உயிரிழந்த இளைஞருக்கு வேறு இணைநோய்கள் இருந்ததா என ஆய்வு நடக்கிறது என மா.சுப்ரமணியன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா தடுப்பு நெறிமுறைகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்துள்ளார். திருச்சியில் உயிரிழந்த இளைஞருக்கு வேறு இணைநோய்கள் இருந்ததா என ஆய்வு நடக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கடந்த 2019ஆம் ஆண்டின் இறுதியில் இருந்தே கொரோனா வைரஸ் என்னும் கொடிய அரக்கன் உலக மக்களை தன்னுடைய பிடியில் வைத்துள்ளது. பல லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 2022ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் புது வைரஸ் ஒன்று தற்போது பரவி மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. கொரோனாவும் 500க்கும் மேற்பட்டோரை பாதிக்கத் தொடங்கியுள்ளது.

அதிகரிக்கும் காய்ச்சல்

அதிகரிக்கும் காய்ச்சல்

இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இன்புளூயன்சா துணை வகை வைரசான எச்3என்2 பரவி வருகிறது. கடந்த ஜனவரி 2 முதல் மார்ச் 5ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் மட்டும் 450க்கு மேற்பட்டோர் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதில் கர்நாடகா மற்றும் ஹரியானாவை சேர்ந்த தலா ஒருவர் சமீபத்தில் உயிரிழந்து உள்ளனர். இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

புதிய வகை கொரோனா வைரஸ் குறித்து பதற்றமடைய வேண்டாம் என நிபுணர்கள் கூறியுள்ளனர். அதேநேரம் கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர். இந்த எச்3என்2 வைரஸ் பன்றிகள் மற்றும் தொற்றுக்கு ஆளானவர்கள் மூலம் பரவுகிறது. இந்த வைரஸ் தாக்கியவர்களுக்கு பிற புளூ வைரஸ் பாதிப்புகள் போல காய்ச்சல், சுவாச கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

காய்ச்சல் அறிகுறிகள்

காய்ச்சல் அறிகுறிகள்

அதேநேரம் உடல் வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகளும் ஏற்படுகின்றன. இந்த தொற்று பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக மாநில அரசுகள் சார்பில் 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

மா.சுப்ரமணியன்

மா.சுப்ரமணியன்

இந்த சூழ்நிலையில் தடுப்பூசி முகாமை தொடக்கி வைத்து பேசிய அமைமச்சர் மா.சுப்ரமணியன், தமிழ்நாட்டில் மீண்டும் ஓமிக்ரான் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதாக கூறினார். மக்கள் முக கவசம் அணிவது அவசியம் என்றும் கூறினார். கட்டாயத்திற்காக முக கவசம் அணியாவிட்டாலும் அவரவர் உடல் ஆரோக்கியத்தை காக்க முக கவசம் அணிவது அவசியம் என்றும் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா

இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா பரவல் 113 நாட்களுக்குப் பிறகு 500க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது. தமிழ்நாட்டிலும் கொரோனா பரவல் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று ஒருநாளில் மட்டும் புதிதாக 40 பேருக்குகொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னை மற்றும் கோவையில் தலா 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி இளைஞர் மரணம்

திருச்சி இளைஞர் மரணம்

பெங்களூருவில் பணியாற்றி வந்த திருச்சியை சேர்ந்த 27 வயது இளைஞர் கோவாவுக்கு சுற்றுலா சென்று கடந்த 9ஆம் தேதி ஊருக்கு திரும்பியுள்ளார். பின்னர் அவர் மூச்சுத்திணறல், வாந்தி மயக்கம் உள்ளிட்ட அறிகுறிகளுடன் ஒரு வாரமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அவருக்கு இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையே அடுத்து உயிரிழந்த இளைஞருடன் கோவா சென்ற 4 பேர் மற்றும் அவரது குடும்பத்தினரை தனிமைபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளதால் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 3,618ஆக பதிவாகியுள்ளது. கொரோனா தடுப்பு நெறிமுறைகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்துள்ளார். திருச்சியில் உயிரிழந்த இளைஞருக்கு வேறு இணைநோய்கள் இருந்ததா என ஆய்வு நடக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். பொது இடங்களில் நடமாடும் மக்கள் மாஸ்க் அணிவதன் மூலம் தங்களை தற்காத்துக்கொள்ளலாம் என்றும் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+