தமிழகத்தில் 1,98,741 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை- 4,253 பேர் மருத்துவ கண்காணிப்பில்!
சென்னை: தமிழகத்தில் இதுவரை 1,98,741 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும் இவர்களில் 4,253 பேர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா தொற்றுநோய் படுதீவிரமாக பரவி வருகிறது. இதனைத் தடுக்க தமிழகத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை உள்ளிட்ட இன்றைய நிலவரம் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் மொத்தம் 1,98,741 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இவர்களில் 4253 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
வியாழக்கிழமையண்று 320 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இன்று மேலும் 13 பேருக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மொத்தமாக 303 பேருக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரியவந்துள்ளது.
#COVID19 TN Stat 20.3.20 :
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) March 20, 2020
Screened Passengers- 198741
Under Followup - 4253
Beds in Isolation Wards- 1120
Current Admissions- 32
Samples Tested - 333 (Negative-303, Positive -3(1 discharged), Under Process- 27)
#TN_Together_AgainstCorona #Vijayabaskar @MoHFW_INDIA
கொரோனா அச்சம் காரணமாக 39 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 7 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தற்போது 32 பேர் மருத்துவமனையில் இருக்கின்றனர். இவ்வாறு விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
-
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
அந்த 3 கேள்விகள்! பதில் சொல்ல கூட முடியாமல் திணறல்! Starlink சேவையை இந்தியாவில் தொடங்குவதில் சிக்கல் -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
இந்தியா மிஸ் செய்த பொக்கிஷம்.. இப்போ அமெரிக்காவே அலறுதே! கேம் சேஞ்சர் மிக்-35 -
மாசம் ரூ.4000 கன்பார்ம்! சிங்கப்பெண் வந்தாச்சு.. விஜய் கையில் எடுக்கும் அடுத்த முக்கிய திட்டம்!












Click it and Unblock the Notifications