படித்து படித்து சொன்ன ஸ்டாலின்.. கொஞ்சம் கூட காதில் வாங்காத தமிழக அரசு.. கடைசியில் நிலைமை இதுதான்!
தமிழகத்தில் கொரோனாவிற்கு இடையிலும் +1, +2 தேர்வுகள் நடத்தப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனாவிற்கு இடையிலும் +1, +2 தேர்வுகள் நடத்தப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சென்னை: தமிழகத்தில் கொரோனாவிற்கு இடையிலும் +1, +2 தேர்வுகள் நடத்தப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று +2 தேர்வு நடத்தப்பட்டது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா வைரஸ்.. இந்த கொடூரமான வைரஸ் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு அதிகம் பரவ காரணமே மக்கள் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வதுதான். அதாவது கொரோனா வைரஸ் உள்ள ஒருவர் வைரஸ் இல்லாத ஒருவரை தொடர்பு கொள்வதன் மூலம்தான் இந்த வைரஸ் பரவுகிறது.
இதனால்தான் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் தனியே வீடுகளில் மருத்துவமனைகளில் வைக்கப்படுகிறார்கள். மக்கள் எல்லோரும் வீட்டிற்கு உள்ளேயே இருக்க வேண்டும் என்று இதனால்தான் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தமிழகம் அரசு மோசம்
இதனால்தான் நாடு முழுக்க கொரோனா வைரஸை எதிர்க்கும் வகையில், 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. நாடு முழுக்க நேற்று இரவு 12 மணியில் இருந்து இந்த ஊரடங்கு அமலில் இருக்கிறது. தமிழகத்திலும் கூட 144 அமலில் உள்ளது. இத்தனை விஷயங்கள் இருக்கும் நிலையில் தமிழகத்தில் நேற்று +2 தேர்வுகள் நடத்தப்பட்டது. 144க்கும் இடையில் நேற்றுக்கு 12 தேர்வு எழுத மாணவர்கள் சென்றனர்.

ஸ்டாலின் எதிர்த்தார்
தமிழகத்தில் கொரோனா காரணமாக தொடர்ந்து +2 தேர்வை எதிர்த்து வந்தவர் திமுக தலைவர் ஸ்டாலின்தான். தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று முதலில் கூறியது ஸ்டாலின்தான். 11&12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவித்து கொரோனா அச்சுறுத்தலை அதிமுக அரசு அலட்சியப்படுத்துகிறதா மத்திய அரசு கல்வி நிறுவனங்களின் தேர்வுகள் ரத்தாகியுள்ள நிலையில்- மாணவர்களின் பாதுகாப்புடன் விபரீத விளையாட்டு நடத்தாமல்,தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று ஸ்டாலின் குறிப்பிட்டு இருந்தார்.

அரசு கொஞ்சம் கூட கேட்கவேயில்லை
ஆனால் இதை தமிழக அரசு கொஞ்சம் கூட காதில் வாங்கிக் கொள்ளவில்லை. வீம்பாக தேர்வு நடத்தியே தீருவோம் என்று கூறியது. கண்துடைப்பு சம்பவம் போல வெறும் 30 நிமிடம் மட்டும் தேர்வு நேரத்தை தள்ளி வைத்தது. 10 மணிக்கு பதிலாக 10.30க்கு தேர்வு தொடங்கும் என்று கூறியது. அதோடு நேற்று தேர்வும் திட்டமிட்டபடி நடத்தப்பட்டது. பேருந்துகள் இல்லை, ஆட்டோ, டாக்சிகள் இல்லை என்றாலும் கூட தேர்வு நடந்தது.

மாணவர்கள் தேர்வு எழுதவில்லை
ஆனால் இந்த தேர்வை எழுத நேற்று 68-70 ஆயிரம் மாணவர்கள் வரவில்லை. முதலில் 36 ஆயிரம் பேர்தான் எழுதவில்லை என்று கூறப்பட்டது. தற்போது 70 ஆயிரம் பேர் வரை தேர்வை எழுதவில்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பேருந்து இல்லாததாலும், கொரோனா அச்சம் காரணமாகவும் பலர் தேர்வை எழுதவில்லை. முக்கியமாக சென்னை கோவையில்தான் பலர் இந்த தேர்வை எழுதவில்லை.

மறு தேதி அறிவிப்பு
இந்த நிலையில் இவர்களுக்காக தற்போது மறுதேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு 24.3.2020 அன்று +2 தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மட்டும் வேறொரு நாளில் தனியாக தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது. முன்பே செய்திருக்க வேண்டிய வேலையை தற்போது அரசு தாமதமாக செய்துள்ளது.

இதில் என்ன விளையாட்டு
தமிழக அரசு முன்பே இதை செய்து இருந்தால் மாணவர்கள் பலர் நேற்று போய் தேர்வு எழுதி இருக்க வேண்டிய அவசியம் இருந்து இருக்காது. கஷ்டப்பட்டு கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் சென்னையிலும், காஞ்சிபுரத்திலும் மாணவர்கள் சென்று தேர்வு எழுதி இருக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது. அரசு கொஞ்சம் முன் யோசனையோடு செயல்பட்டு இருந்தால் மாணவர்கள் இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்திருக்க வேண்டியது இல்லை.

அரசியல் வீம்பு வேண்டாம்
தேர்வு போனால் திரும்ப வரும், ஆனால் உயிர் போனால் திரும்ப வருமா?. திமுக தலைவர் ஸ்டாலின் சொன்னார் என்ற ஒரே காரணத்திற்காக தேர்வை ஒத்திவைக்காமல் இருப்பது எந்த விதத்தில் நியாயம். நாடு முழுக்க முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால் இப்போதும் கூட தமிழக அரசு +2 தேர்வை ஒத்திவைப்பதாக அறிவிக்கவில்லை. இன்னும் தேர்வை ஒத்திவைப்பது தொடர்பான அறிவிப்பை அரசு வெளியிடவில்லை.












Click it and Unblock the Notifications