கோவையில் திடீர் உச்சம்.. தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா.. தமிழகத்தில் இன்று 5870 பேர் பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று 5870 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,57,697 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சராசரியாக தமிழகத்தில் தினமும் 5900 கொரோனா கேஸ்கள் வந்தவண்ணம் உள்ளது.
சென்னையிலும் 1000க்கும் அதிகமாக கொரோனா கேஸ்கள் வந்த நிலையில் தற்போது 1000க்கு குறைவாக கேஸ்கள் வர தொடங்கி உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் 1000க்கும் குறைவான கேஸ்கள் வர தொடங்கி உள்ளது.

சென்னை எப்படி
965 பேர் இன்று சென்னையில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,39,720ல் இருந்து 1,40,685 ஆக அதிகரித்துள்ளது.சென்னையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 12,003ல் இருந்து 11,412 ஆக உள்ளது.

எத்தனை மரணம்
தமிழகத்தில் இன்று 61 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் மொத்தமாக 7748 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் மொத்தமாக 3,98,366 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார்கள். தமிழகத்தில் இன்று 5859 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 51583 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக இருக்கிறார்கள்.

கொரோனா சோதனை
தமிழகத்தில் கொரோனா சோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்தது. 50,42,197 பேர் தமிழகத்தில் கொரோனா சோதனை செய்யப்பட்டு உள்ளனர். இன்று 89793 மாதிரிகள் தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. சோதனைகளை தமிழகம் துரிதப்படுத்தி உள்ளது.
- 5212534 மாதிரிகள் இதுவரை தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் இன்று 79840 பேருக்கு கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது.
- மொத்தமாக 5042 197 பேருக்கு தமிழகத்தில் இதுவரை கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.

சென்னைக்கு அடுத்து
இன்று செங்கல்பட்டில் 293 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 27947 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று கடலூர் 434 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 13669 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று கோவையில் 545 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 18410 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications