மீண்டும் அதிகரிக்கும் கேஸ்கள்.. தமிழகத்தில் இன்று 5995 பேருக்கு கொரோனா.. சென்னையிலும் மோசமடைகிறது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,995 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3.6 லட்சத்தை கடந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. சராசரியாக 5500 கேஸ்கள் தினமும் வந்த நிலையில் தற்போது மீண்டும் 5900க்கும் அதிகமாக கேஸ்கள் வர தொடங்கி உள்ளது.

அதோடு சென்னையிலும் கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. சென்னையில் 1000க்கும் குறைவாக கேஸ்கள் வந்த நிலையில் மீண்டும் 1200ஐ தாண்ட தொடங்கி உள்ளது.

தமிழகம் எப்படி

தமிழகம் எப்படி

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,995 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு 367430 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 1,282 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மொத்தமாக 122757 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னைக்கு அடுத்து

சென்னைக்கு அடுத்து

சென்னைக்கு அடுத்து இன்று செங்கல்பட்டில் 430 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 22737 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று திருவள்ளூரில் 369 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 21756 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று கோவையில் 395 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 10957 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

டிஸ்சார்ஜ்

டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 101 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். கொரோனாவால் பலியானோர் மொத்த எண்ணிக்கை 6,340 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 5764 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை மொத்தமாக 307677 டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 53413 ஆக உயர்ந்துள்ளது.

சோதனை எத்தனை

சோதனை எத்தனை

இன்று 72344 மாதிரிகள் தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. 4062943 மாதிரிகள் இதுவரை தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 72223 பேருக்கு கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 3923843 பேருக்கு தமிழகத்தில் இதுவரை கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. சோதனைகளை தமிழகம் துரிதப்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+