கொரோனாவில் இருந்து எஸ்கேப்பாக வீட்டுக்கு வீடு குவார்ட்டர் சரக்கு கொடுங்களேன்.. மன்சூர் அலிகான்
சென்னை: கொரோனாவில் இருந்து தப்பிக்க வீடுதோறும் குவார்ட்டர் மதுபானம் வழங்க வேண்டும் என்று நடிகர் மன்சூர் அலிகான் கோரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் நடிகர் மன்சூர் அலிகான் கூறியதாவது:

கொரோனாவில் இருந்து தப்பிக்க வீட்டை விட்டு வெளியேவரக் கூடாது என்று பிரதமர் அறிவித்துள்ளார். இதனால் தினக் கூலி தொழிலாளர்கள், திரைத்துறை தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு நட்ட ஈடு வழங்க வேண்டும்.
தொட்டாலே தீட்டு என்பதை நியாயப்படுத்தும் வகையில் கொரோனா பீதியை கிளப்புகின்றனர். அப்படியானால் தொட்டு எண்ணக் கூடிய ரூபாய் நோட்டுகளை எரிப்பீர்களோ?

ஆரத்தழுவி வணங்குவதுதான் நமது பண்பாடு. இதற்கு எதிரானது தொட்டால் தீட்டு. இது யாருடைய பண்பாடு என்பதை புரிந்து கொள்ளுங்கள். முட்டையை சாப்பிட்டால் கொரோனா வராது. இதோ நான் பச்சை முட்டையை உடைத்து குடித்து காட்டியிருக்கிறேன். எனக்கு கொரோனா வராது.
வெளிநாட்டினர் மூலம்தான் கொரோனா பரவுகிறது எனில் தொடக்கத்திலேயே அவர்களை ஏன் தடுத்து நிறுத்தவில்லை? பேசாமல் கொரோனாவில் இருந்து தப்பிக்க வீட்டுக்கு வீடு குவார்ட்டர் மதுபானம் வழங்கலாம்.
நடிகர் விஜய்யை கழுத்தை பிடிக்காத குறையாக வருமான வரித்துறையினர் அழைத்து வந்தது தவறான முன்னுதாரணம். ஜனநாயகமற்ற செயலும் கூட. இவ்வாறு நடிகர் மன்சூர் அலிகான் கூறினார்.
-
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது? -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம்












Click it and Unblock the Notifications