திடீரென ஒரே நாளில் குறைந்த கேஸ்கள்.. முடிவிற்கு வருகிறதா கோயம்பேடு கிளஸ்டர்.. நேற்று என்ன நடந்தது?
சென்னை: தமிழகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக புதிய கொரோனா கேஸ்கள் குறைய தொடங்கி உள்ளது. இதனால் கோயம்பேடு கிளஸ்டர் தமிழகத்தில் குறைய தொடங்கி உள்ளதா என்று கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video
தமிழகத்தில் நேற்று 447 பேருக்கு புதிதாக கொரோனா ஏற்பட்டது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9674 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஆக்டிவ் கேஸ்கள் 7365 பேர் உள்ளனர்.
சென்னையில் 363 பேருக்கு நேற்று கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் இதன் மூலம் 5637 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

கோயம்பேடு காரணம்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் கேஸ்கள் அதிகம் வர காரணம் கோயம்பேடு என்பது குறிப்பிடத்தக்கது. கோயம்பேட்டில் கொரோனா பாதிக்கப்பட்ட நபர்கள் வெவ்வேறு பகுதிகளுக்கு சென்றதால் மாநிலம் முழுக்க கொரோனா பரவியது. கொரோனா கேஸ்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழகம் முழுக்க கோயம்பேடு காரணமாக கொரோனா கேஸ்கள் அதிகரித்தது. முக்கியமாக சென்னையில் அதிக அளவில் கேஸ்கள் ஏற்பட்டது.

எத்தனை நாட்கள்
தமிழகத்தில் முதல் கொரோனா கேஸ்கள் ஏபல் 27ம் தேதி ஏற்பட்டது. அதில் இருந்து தமிழகத்தில் தொடர்ந்து கேஸ்கள் அதிகரித்தது. ஏப்ரல் 27ம் தேதி 121 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. ஏப்ரல் 28ம் தேதி 104 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. ஏப்ரல் 29ம் தேதி 161 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. ஏப்ரல் 30ம் தேதி 161 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. மே 1ம் தேதி 203 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. மே 2ம் தேதி 231 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. மே 3ம் தேதி 266 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.

மே தொடக்கம்
மே 4ம் தேதி 527 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. மே 5ம் தேதி 508 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. மே 6ம் தேதி 771 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. மே 7ம் தேதி 580 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. மே 8ம் தேதி 600 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. மே 9 ம் தேதி 526 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. மே 10ம் தேதி 669 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. மே 11ம் தேதி 798 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. மே 12ம் தேதி 716 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. மே 13ம் தேதி 509 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.

முதல்முறை குறைந்துள்ளது
இந்த நிலையில் தமிழகத்தில் கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு பிறகு முதல் முறையாக கேஸ்கள் குறைய தொடங்கி உள்ளது. நேற்றும் கொஞ்சம் குறைவாக கேஸ்கள் வந்த நிலையில், இன்றும் கொஞ்சம் குறைவாக கேஸ்கள் வந்துள்ளது. மேலும் தமிழகத்தில் வரும் நாட்களில் கேஸ்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும் என்று கூறுகிறார்கள். இனி புதிய கேஸ்கள் அதிகமாக இருக்காது என்கிறார்கள்.

காரணம் 1
இதற்கு முக்கிய காரணம், தமிழகத்தில் கோயம்பேடு காரணமாக ஏற்படும் கேஸ்கள் குறைய தொடங்கி உள்ளது. கோயம்பேடு மார்க்கெட் சென்ற, அங்கு கடை வைத்திருத்த நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுவிட்டது. இதனால் இனி வரும் நாட்களில் கோயம்பேடு கிளஸ்டர் மூலம் கேஸ்கள் அதிகம் வராது. கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்தில் கோயம்பேடு கிளஸ்டர் குறைந்து முடிவிற்கு வரும் என்கிறார்கள்.

வேறு காரணம்
அதேபோல் இதற்கு இன்னொரு காரணமும் கூறப்படுகிறது. தமிழகத்தில் தற்போது கொரோனா தீவிரம் அடைய கோயம்பேடு மட்டுமே காரணம். வேறு எங்கும் தமிழகத்தில் புதிய கிளஸ்டர் உருவாகவில்லை. கோயம்பேடு மட்டுமே தமிழகத்தில் ஒரே கிளஸ்டராக இருக்கிறது. இதனால் தமிழகத்தில் வரும் நாட்களில் வேகமாக கேஸ்கள் குறைய வாய்ப்புள்ளது

கூறியது என்ன
ஏற்கனவே சென்னையில் 6 நாட்களுக்கு கொரோனா கேஸ்கள் வேகமாக அதிகரிக்கும். அதன்பின் கொரோனா கேஸ்களில் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறையும் என்று சென்னை மாநகராட்சியின் கொரோனா தடுப்பு சிறப்பு முதன்மை அதிகாரி டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அந்த 6 நாட்கள் இன்றோடு முடிகிறது. இதனால் இனி வரும் நாட்களில் தமிழகத்தில் கேஸ்கள் வேகமாக குறைய வாய்ப்புள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications