மிகப்பெரிய சாதனை.. தமிழகத்தில் ஒரே நாளில் 52 ஆயிரம் கொரோனா சோதனைகள்.. எப்படி நடந்தது? பின்னணி
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் ஒரே நாளில் 52 ஆயிரம் கொரோனா மாதிரிகளை சோதனை செய்து இருக்கிறார்கள்.
கொரோனா பாதிப்பு தமிழகத்தில் மோசம் அடைந்து வருகிறது. மொத்தமாக 2 லட்சம் பாதிப்பை நோக்கி தமிழகம் சென்று கொண்டு இருக்கிறது.
தமிழகத்தில் இன்று மட்டும் 4979 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,65,714 லிருந்து 1,70,693 ஆக அதிகரித்துள்ளது.

செம மாற்றம்
இந்த நிலையில் அதிரடி திருப்பமாக தமிழகத்தில் இன்று மட்டும் ஒரே நாளில் 52 ஆயிரம் கொரோனா மாதிரிகளை சோதனை செய்து இருக்கிறார்கள். இன்று 52993 மாதிரிகள் தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. 1932492 மாதிரிகள் இதுவரை தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 51640 பேருக்கு கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 1855817 பேருக்கு தமிழகத்தில் இதுவரை கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.

செம துரிதம்
கொரோனா சோதனைகளை தமிழகம் துரிதப்படுத்தி உள்ளது. தமிழகத்தில் மொத்தமாக சோதனை மையங்களின் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் தமிழகத்தில்தான் அதிகமாக சோதனை மையங்கள் உள்ளது.அதேபோல் இந்தியாவிலேயே அதிகமாக தமிழகத்தில்தான் கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

எங்கு நடக்கவில்லை
இந்தியாவில் எங்கும் ஒரே நாளில் இத்தனை கொரோனா சோதனைகள் செய்யப்படவில்லை. கடந்த மூன்று நாட்களில் தமிழகத்தில் 1.40 லட்சம் கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இந்திய அளவில் இதுதான் மிக அதிகம். அதிகமாக கொரோனா சோதனைகளை செய்வதன் மூலம் நோய் பரவலை எளிதாக கண்டுபிடிக்க முடியும். இதன் மூலம் மேலும் கொரோனா பரவலை தடுக்க முடியும்.
Recommended Video

எப்படி செய்தது
- தமிழகத்தில் இப்படி அதிக கொரோனா சோதனைகளை செய்ய நான்கு காரணங்கள் சொல்லப்படுகிறது. அதன்படி
- வீடு வீடாக செய்யப்பட்ட கொரோனா சோதனைகள்
- அதிக அளவில் வாங்கப்பட்ட பிசிஆர் சோதனை கிட்கள்.
- சோதனை செய்யப்படும் நேரம் 6 மணி நேரத்தில் இருந்து மூன்று மணி நேரமாக குறைக்கப்பட்டது.
- கடைசியாக தமிழகத்தில் மொத்தமாக சோதனை மையங்களின் எண்ணிக்கை 112 ஆக உயர்த்தப்பட்டது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications