யாராச்சும் வந்தீங்க.. கட்டிப் பிடிச்சுருவேன்.. பதற வைத்த புளியந்தோப்புக்காரர்.. ஷாக் ஆன போலீஸார்!
கொரோனா வார்டில் இருந்து தப்பிய நபரால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சென்னை: யாராச்சும் என்கிட்ட வந்தீங்கன்னா கட்டிப்பிடிச்சுடுவேன் என்று கொரோனா வார்டில் தப்பித்து சென்ற நோயாளி ஒருவர் மிரட்டல் விடுத்து வருகிறார்!! இதனால் நாளுக்கு நாள் பதட்டம் ஏற்பட்டு வரும் சென்னையில், இந்த சம்பவமும் மேலும் பரபரப்பை தந்து வருகிறது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.. இதில் பீதியை கிளப்புவது சென்னைதான்.. முதலிடத்தில் பாதிப்பில் நின்று மிரட்டி கொண்டிருக்கிறது.. இதனால் சென்னை மாநகரத்தை எப்படி கட்டுக்குள் கொண்டு வருவது என அரசு தீவிரமாக யோசித்து ஒவ்வொரு நடவடிக்கையாக செய்து வருகிறது.

இந்நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.. இவர் வடசென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர்.. 45 வயதாகிறது.. வடசென்னையில்தான் இப்போதைக்கு தொற்று பாதிப்பு அதிகம்.. இந்த நபருக்கு 2 நாளைக்கு முன்புதான் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.. அதனால் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் உள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஆனால் நேற்றிரவு அங்கிருந்து தப்பி இவர் அவரது வீட்டுக்கு ஓடிவிட்டார்.. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை திரும்பவும் அழைத்து வர வீட்டிற்கு சென்றனர்.. ஆனால் ஆஸ்பத்திரிக்கு வர முடியாது என்று அந்தநபர் முரண்டு பிடித்துள்ளார்.. யாராவது கிட்ட வந்தால் அவர்களை கட்டிப்பிடித்து விடுவேன் என்றும் மிரட்டினார்.

இதையடுத்து, இன்று காலை மேலும் ஒரு மருத்துவக் குழுவினர் அவரை அழைத்துவர திரும்பவும் வீட்டிற்கு போனார்கள்.. அப்போதும் அந்நபர் பிடிவாதம் காட்டி உள்ளார்... அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் சொல்லப்படுகிறது.. ஆனால் ஆஸ்பத்திரி அவரை இன்னமும் அழைத்து செல்லவும் முடியாமல், அருகில் செல்லவும் முடியாமல் மருத்துவ டீம் திணறி வருவதாக தகவல்கள் கூறுகின்றன!
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications