தமிழகத்தில் இன்று தளர்வுகள் இல்லாத முழு லாக்டவுன் அமல்
சென்னை: தமிழகத்தில் இன்று தளர்வுகள் இல்லாத கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பரவுவதை தடுக்க லாக்டவுன் 7வது கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்த ஆகஸ்ட் மாதமும் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் இல்லாத லாக்டவுன் அமல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்தது.

இதனடிப்படையில் முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று காலை முதல் முழு லாக்டவுன் அமலுக்கு வந்தது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் கொரோனாவில் இருந்து மீண்டு வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அதேநேரத்தில் சென்னை தவிர்த்த பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்தும் வருகிறது. இதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

முழு லாக்டவுன் அமல்படுத்தப்படுவதால் நேற்று மாலை முதலே இறைச்சி கடைகளில் கூட்டங்கள் அதிகமாக காணப்பட்டது. அதிகாலையிலும் பல இடங்களில் கடைகள் சிறிது நேரம் திறக்கப்பட்டு பின்னர் 6 மணி முதல் மூடப்பட்டன.












Click it and Unblock the Notifications