ராயபுரத்தில் தீவிரம் அடையும் கொரோனா.. அறிகுறியே இல்லாமல் அதிகரிப்பதால் குழப்பம்.. அதிர்ச்சி பின்னணி!
கொரோனா காரணமாக சென்னையில் ராயபுரத்தில்தான் அதிகமான நபர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
சென்னை: கொரோனா காரணமாக சென்னையில் ராயபுரத்தில்தான் அதிகமான நபர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
Recommended Video
கொரோனா பாதிப்பில் இருந்து தமிழகம் கொஞ்சம் கொஞ்சமாக மீள்வது போல அறிகுறிகள் தென்பட்டது. ஆனால் தமிழகம் இதில் ஆசுவாசம் அடையும் முன் மீண்டும் கொரோனா தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. தமிழகத்தில் நேற்று 56 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,323 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 103 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 283 பேர் குணமடைந்து உள்ளனர். சென்னையில் அதிகமாக 233 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை ராயபுரம்
சென்னையில் கொரோனா காரணமாக ராயபுரத்தில்தான் அதிகமான நபர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அங்கு தினமும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அதிகமான நபர்கள் கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். நேற்று மட்டும் சென்னையில் 11 பேருக்கு கொரோனா தாக்குதல் ஏற்பட்டது. அதில் ராயபுரத்தில் இருந்து மட்டும் 8 பேருக்கு கொரோனா தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் அதிகம்
இதில் கவலை அளிக்கும் விஷயம் என்னவென்றால் நேற்று பாதித்த 8 பேரில் ஒருவருக்கு மட்டுமே நேரடியாக கொரோனா ஏற்பட்டுள்ளது. மீதம் உள்ள 7 பேருக்கு அவர்களின் தொடர்பு மூலம் கொரோனா பரவி உள்ளது. அதாவது ஸ்டேஜ் 2 பரவல் ஆகும். சென்னையில் ராயபுரத்தில் மொத்தம் 73 பேர் கொரோனா மூலம் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம் சென்னையின் எபிசென்டராக ராயபுரம் மாறியுள்ளது.

அறிகுறியே இல்லாமல் பரவுகிறது
ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நாளில் இருந்து நேற்றுதான் மிக மோசமான நாளாக பார்க்கப்படுகிறது. அதேபோல் இதில் சிலருக்கு அறிகுறியே இல்லாமல் கொரோனா ஏற்பட்டுள்ளது. அறிகுறியே இல்லாமல் கடைசி நேரத்தில் மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். அவர்களுக்கு சோதனை செய்து பார்த்தால் கொரோனா இருக்கிறது. இது போல கடைசி நேரத்தில் கொரோனா கண்டுபிடிக்கப்படும் நபர்களுக்கு சிகிச்சை அளிப்பது கடினம் ஆகும்.

அதிகமான கட்டுப்பாடுகள்
இந்தியா முழுக்க இப்படி அறிகுறி இல்லாமல் பரவும் கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை அதிகம் ஆகியுள்ளது. ராயபுரத்தில் அதேபோல் அறிகுறி இல்லாமல் கொரோனா பரவி வருகிறது. இந்த நிலையில் ராயபுரத்தில் வரும் நாட்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். மொத்தமாக அனைத்து சாலைகளும் மூடப்படும். கட்டுப்பாடுகள் மிக கடுமையாக பின்பற்றப்படும் என்று நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

மண்டல விவரமா
அதேபோல் கொரோனா பாதிப்பு குறித்து சென்னையில் மண்டல வாரியான விவரங்கள் வெளியாகி உள்ளது. சென்னையில் திருவொற்றியூர் பகுதியில் 5 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வளசரவாக்கம் பகுதியில் 5 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அடையாறு 7 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தேனாம்பேட்டையில் 19 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தண்டையார்ப்பேட்டையில் 20 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

வேறு எங்கெல்லாம் கொரோனா
திருவிக நகரில் 33 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பெருங்குடியில் 7 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கோடம்பாக்கத்தில் 26 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அண்ணாநகரில் 24 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாதவரத்தில் 3 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.சோழிங்கநல்லூரில் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆலந்தூரில் 3 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications