இதுதான் தற்போது பிரச்சனை.. தமிழகத்திற்கு கவலை அளிக்கும் 3 விஷயங்கள்.. அதிர்ச்சி தரும் பின்னணி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் வேகம் எடுத்து வரும் நிலையில் முக்கியமான மூன்று விஷயங்களை கவலை அளிக்கும் பிரச்சனையாக மாறியுள்ளது.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 1149 பேருக்கு கொரோனா கேஸ்கள் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு 22333 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று மொத்தமாக 804 கேஸ்கள் வந்துள்ளது. சென்னையில் இதுவரை வந்ததில் இதுதான் அதிகமான எண்ணிக்கை ஆகும். சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14802 ஆக உயர்ந்துள்ளது .

சென்னை நிலை மோசம்

சென்னை நிலை மோசம்

தமிழகத்திற்கு கவலை அளிக்கும் மூன்று விஷயங்களில் முக்கியமான விஷயம் என்று பார்த்தால், அது சென்னையின் நிலைதான். சென்னையில் தினமும் 600+ என்று சராசரியாக கேஸ்கள் வந்த நிலையில் தற்போது ஒரே நாளில் 800+ கேஸ்கள் சென்னையில் மட்டும் வந்துள்ளது. சென்னையில் தொடக்க காலத்தில் கோயம்பேடு மார்கெட் காரணமாக கொரோனா பரவியது. ஆனால் கோயம்பேடு காரணமாக தற்போது பெரிய அளவில் கேஸ்கள் வரவில்லை.

மிக மோசம்

மிக மோசம்

கோயம்பேடு மார்க்கெட் செல்லாத நபர்களுக்கு கூட சென்னையில் கேஸ்கள் வர தொடங்கி உள்ளது. கொரோனா உள்ளவர்களோடு தொடர்பே இல்லாத நபர்களுக்கு சென்னையில் கேஸ்கள் வர தொடங்கி உள்ளது. இதுதான் தற்போது அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது. இதனால் சென்னையில் சமூக பரவல் பெரிய அளவில் தீவிரம் அடைந்துள்ளது என்றும் கூறுகிறார்கள். இனி வரும் நாட்களில் சென்னையில் இன்னும் கேஸ்கள் அதிகரிக்கும் என்கிறார்கள்.

சோதனை குறைவு

சோதனை குறைவு

அதேபோல் தமிழகத்தில் இன்று கொரோனா சோதனைகள் அதிகரிக்கப்படவில்லை. தமிழகத்தில் இன்று 12089 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்றும் இதே எண்ணிக்கையில்தான் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமாக 491962 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா சோதனையை அதிகரிக்காமலே கேஸ்கள் அதிகரித்துள்ளது.

மிக மோசம்

மிக மோசம்

அதாவது சோதனைகளை அதிகமாக செய்யாமலே கொரோனா கேஸ்கள் அதிகம் வந்துள்ளது. இதனால் இன்று கேஸ்கள் அதிகரிக்க அதிக டெஸ்ட் காரணம் இல்லை. மாறாக கொரோனா பரவல் உண்மையில் அதிகம் இருக்கிறது. மக்கள் இடையே கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. இதுதான் இன்று கொரோனா பரவல் அதிகரிக்க காரணம் என்று கூறுகிறார்கள். இதுவும் அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது.

அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

இன்னொரு பக்கம் தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று 13 பேர் பலியாகி உள்ளனர். தினமும் 10க்கும் குறைவாக இருந்த பலி எண்ணிக்கை இன்று 13 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இப்படி பலி எண்ணிக்கை அதிகரித்தால் வரும் நாட்களில் இன்னும் பலர் பலியாக வாய்ப்புள்ளது. தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 173 ஆக உயர்ந்து இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+