ரூ.500 மளிகை பொருள்.. ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் வழங்க வேண்டும்.. சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு!
சென்னை: ரேசன் கடைகளில் வழங்கப்பட உள்ள 500 ரூபாய்க்கான மளிகைப் பொருட்களை ரேசன் கார்டு இல்லாத அனைத்து மக்களுக்கும், நேரடியாக வீட்டிலேயே வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
ஊரடங்கின் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதோடு, அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் காரணமாக தமிழக அரசு, வீட்டிற்கு தேவையான 19 வகையான மளிகைப் பொருட்களுக்கான தொகுப்பை ரேசன் கடைகளில் ரூபாய் 500 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்திருந்தது.

500ரூபாய் மதிப்பிலான இந்த அத்தியாவசிய பொருட்கள், குடும்ப அட்டை வைத்திருப்பவர் மட்டுமல்லாமல், குடும்ப அட்டை இல்லாத அனைவருக்கும் வழங்க வேண்டும் என்று வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அதோடு நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதால் மளிகைப் பொருட்களை வீட்டிற்கே கொண்டு வந்து வழங்க உத்தரவிடக் கோரியும் வழக்கறிஞர் சூர்யபிரகாசம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், கொரோனோ நோய் தொற்றை எதிர்கொள்ள ஊட்டச்சத்து அவசியமாக உள்ள சூழலில் ஊரடங்கினால் 10 லட்சத்திற்கும் அதிகமான நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு போதுமாக உணவு கிடைக்காத நிலை உள்ளது.
அத்தகைய ஏழை மக்களுக்கும், குழந்தைகளுக்கும் தேவையான உணவை எடுத்து செல்லும் தன்னார்வலர்களை கைது செய்ய கூடாது என்ற கோரிக்கையையும் வைத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications