நிலைமை மோசம் அடைகிறது.. சின்ன வயதில் கூட பலியாகிறார்கள்.. தமிழகத்துக்கு அதிர்ச்சி தரும் 3 விஷயங்கள்!
சென்னை: தமிழகத்தில் சமீப நாட்களாக கொரோனா காரணமாக பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கை மீறி செல்கிறது. நினைத்ததை விட அதிக எண்ணிக்கையில் கொரோனா கேஸ்கள் தமிழகத்தில் வர தொடங்கி உள்ளது. நேற்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டது.
நேற்று தமிழகத்தில் மேலும் 1,989 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 42,687 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 30,444 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் கொரோனா காரணமாக 397 பேர் இதுவரை பலியாகி உள்ளனர்.

பலி எண்ணிக்கை
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா கேஸ்கள் அதிகமாகி வரும் நிலையில் இன்னொரு பக்கம் கொரோனா காரணமாக ஏற்படும் மரணங்களும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. தமிழ்கத்தில் கடந்த மாத தொடக்கத்தில் தினசரி மரணம் என்பது 5-6 என்ற அளவில் இருந்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாக தினசரி மரணம் 10-20 என்ற நிலையை எட்டியது. அதிலும் கடந்த சில நாட்களாக பலி எண்ணிக்கை 20 ஐ தொட்டது.

என்ன மோசம்
ஆனால் தற்போது நிலைமை இன்னும் மோசமாகி உள்ளது. தமிழகத்தில் தற்போது தினசரி பலி எண்னிக்கை 30ஐ தாண்ட தொடங்கி உள்ளது.நேற்று மட்டும் தமிழகத்தில் 30 பேர் பலியாகி உள்ளனர். இத்தனை நாட்கள் 20 என்ற எண்ணிக்கையில் பலி எண்ணிக்கை இருந்தது. ஆனால் தற்போது அது 30ஐ தொட்டு உள்ளது. இனி வரும் நாட்களில் இந்த பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.

வயது
இப்படி தமிழகத்தில் பலி எண்ணிக்கை உயர நிறைய காரணங்கள் சொல்லப்படுகிறது. இதில் சில விஷயங்கள் தமிழகத்திற்கு அதிர்ச்சி அளிக்கும் விஷயங்களாக மாறியுள்ளது. அதன்படி தமிழகத்தில் கொரோனா காரணமாக முன்பு வயது அதிகமானவர்கள் மட்டுமே பலியானார்கள். ஆனால் தற்போது தமிழகத்தில் வயது குறைவானவர்கள் கூட பலியாக தொடங்கி உள்ளது.

நேற்று நிலைமை
தமிழ்கத்தில் நேற்று பலியான 30 பேரில் 12 பேர் வயது குறைவானவர்கள். இவர்கள் எல்லோரும் 50 வயது அல்லது 50 வயதிற்கும் குறைவான நபர்கள். தமிழகத்தில் இப்படி குறைவான வயதோடு பலியாகும் நபர்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கி உள்ளது. இன்னொரு பக்கம் தமிழகத்தில் நோய் குறைபாடு எதுவும் இல்லாதவர்களும் பலியாவது அதிகரிக்க தொடங்கி உள்ளது.

கோமார்பர்ட்டி குறைபாடு
முன்பு தமிழகத்தில் கோமார்பர்ட்டி எனப்படும் சர்க்கரை வியாதி, கல்லீரல் பிரச்சனை போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் மட்டுமே பலியானார்கள். ஆனால் தற்போது அப்படி உடலில் குறைபாடு இல்லாத நபர்களும் கூட பலியாக தொடங்கி உள்ளனர். நேற்று பலியான 30 பேரில் 7 பேருக்கு உடலில் எந்த விதமான குறைபாடும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

கடைசி விஷயம்
அதேபோல் இன்னொரு பக்கம் தமிழகத்தில் முன்பு கடைசி நேரத்தில் மருத்துவமனையில் சேரும் நபர்கள் மட்டுமே பலியானார்கள். ஆனால் தற்போதெல்லாம் நீண்ட நாட்களாக தமிழகத்தில் சிகிச்சை பெற்று வரும் நபர்கள் கூட கொரோனா காரணமாக பலியாகிறார்கள். இரண்டு வாரமாக தீவிர சிகிச்சை பெற்று வரும் நபர்கள் கூட கடைசி நேரத்தில் கொரோனா காரணமாக பலியாகும் அவலங்கள் ஏற்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோன மரணங்கள் அதிகரிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது .












Click it and Unblock the Notifications