மோசமாக விமர்சித்த ரஜினி ஃபேன்ஸ்.. கிழித்து தொங்கவிட்ட தமிழ்நாடு வெதர்மேன்.. இடி.. மின்னல்.. சூறாவளி!

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் செய்த ஒரே ஒரு டிவிட்டர் போஸ்ட் காரணமாக அவரை நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் செய்த ஒரே ஒரு டிவிட்டர் போஸ்ட் காரணமாக அவரை நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். இதனால் ரஜினிகாந்த் ரசிகர்கள் பலரை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் பிளாக் செய்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் கொரோனா வைரஸ் குறித்து வெளியிட்ட வீடியோ நேற்று டிவிட்டர் நிறுவனத்தால் டெலிட் செய்யப்பட்டது. கொரோனா வைரஸ் 12 மணி நேரத்தில் செத்துவிடும் என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டு இருந்த அந்த வீடியோ முழுக்க முழுக்க வதந்தி ஆகும்.

இதை முதலில் கண்டுபிடித்து விமர்சனம் செய்தது தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்தான். ரஜினிகாந்த் தனது வீடியோவில் குறிப்பிட்டு இருக்கும் தகவல் தவறானது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் குறிப்பிட்டு இருந்தார்.

மோசம்

மோசம்

இந்த விமர்சனத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் மிகவும் மோசமாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்பை விமர்சனம் செய்தனர். ஏற்கனவே ரஜினிகாந்த் ரசிகர்கள் சிலர் இணையத்தில் மிக மோசமாக பேசுகிறார்கள். எதிர்கருத்து பேசும் நபர்களை மோசமாக விமர்சிக்கிறார்கள் என்ற விமர்சனம் உள்ளது. அதற்கு ஏற்றபடியே இன்று ரஜினிகாந்த் ரசிகர்கள் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்பை இழிவாக விமர்சனம் செய்தனர்.

அமைதி அமைதி

அமைதி அமைதி

அதன்படி முதலில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் குறித்து நேரடியாக ரஜினி ரசிகர்கள் விமர்சனம் செய்தனர். அதன்பின் அவரை மட்டுமின்றி அவரின் குடும்பம் குறித்தெல்லாம் பேசினார்கள். அதன்பின் நீங்கள் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர் என்று கூறி மதத்தை தவறாக பேசி விமர்சனம் செய்ய தொடங்கினார்கள். அனைத்தையும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் அமைதியாக, நாகரீகமாக கேட்டுக்கொண்டு இருந்தார்.

மின்னல்

மின்னல்

ஆனால் கொஞ்ச நேரத்திற்கு மேல் பொங்கி எழுந்த தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப், இடி, மின்னலாக கொதிக்க தொடங்கினார். தன்னை விமர்சனம் செய்த ரஜினி ரசிகர்கள் எல்லோருக்கும் விடாமல் பதிலடி கொடுத்தார். ஆனாலும் ரஜினி ரசிகர்கள் அமைதியாகாமல் தொடர்ந்து அவரிடம் சண்டை போட்டனர். ரஜினி பேசியது ஏன் தவறு என்று ஆதாரங்களுடன் பிரதீப் விளக்கி பார்த்தார். ஆனால் அவர்கள் கேட்கவில்லை.

விளக்கம் என்ன

விளக்கம் என்ன

பிரதீப் கொடுத்த அறிவியல் பூர்வமான விளக்கம் எதையும் ரஜினி ரசிகர்கள் கேட்பதாக இல்லை. மாறாக தொடர்ந்து பிரதீப்பை மோசமாக ரஜினி ரசிகர்கள் விமர்சனம் செய்தனர். இதனால் ரஜினி ரசிகர்கள் பலரை பிரதீப் கோபத்துடன் அடுத்தடுத்து பிளாக் செய்ய தொடங்கினார். முதலில் ரஜினியை சார் என்றுதான் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் டிவிட் செய்து வந்தார். அதன்பின் ரஜினி ரசிகர்களின் செயலை பார்த்துவிட்டு என்ன நினைத்தாரோ தெரியவில்லை, வெறும் ரஜினி என்றே டிவிட் செய்ய தொடங்கிவிட்டார்.

என்ன கிண்டல்

இதை குறிப்பிட்டு, எதுக்கு ''ஒரு சாரை வேஸ்ட் பண்ணிக்கிட்டு'' என்று கிண்டலாக அவரே குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து பிரதீப் செய்துள்ள டிவிட்டில், ரஜினியின் ரசிகர்களுக்கு ரஜினிக்கு அதிக நன்மைகளை விட தீமைகளைத்தான் செய்வார்கள். ஸ்டாலின், முதல்வர், அல்லது பிரதமர் என்று யார் தவறு செய்தாலும் அதை நான் சுட்டிக் காட்டுவேன். ஒரு தவறை தவறு என்று சுட்டிகாட்டுவது தவறு இல்லை. என்னை இழிவு செய்ய நினைப்பது வேலைக்கு ஆகாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+