சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நிம்மதி.. தமிழகத்தில் 12 பேருக்கு கொரோனா.. 11 பேருக்கு இடையில் உள்ள ஒரே ஒரு ஒற்றுமை.. என்ன தொடர்பு?

தமிழகத்தில் கொரோனா ஏற்பட்டுள்ள 9 பேருக்கும் இடையில் முக்கியமான ஒற்றுமை ஒன்று உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கொரோனா ஏற்பட்டுள்ள 12 பேரில் 11 பேருக்கும் இடையில் முக்கியமான ஒற்றுமை ஒன்று உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    48 மணி நேரத்தில் 100 பேருக்கு பாதிப்பு... இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா

    கொரோனா வைரஸ் இந்தியாவில் உச்சம் பெற தொடங்கி உள்ளது. இந்தியாவில் தற்போது 424 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. அதிகமாக 89 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கேரளாவில் 69 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

    அதற்கு அடுத்ததாக 30 பேருக்கு தெலுங்கானாவில் கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 12 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

    முதலில்

    முதலில்

    தமிழகத்தில் முதலில் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவருக்குத்தான் கொரோனா ஏற்ப்பட்டது. ஓமனில் பணியாற்றி வந்த இவர் தமிழகம் திரும்பிய பின் அவருக்கு கொரோனா ஏற்பட்டது. இவருக்கு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின் இவர் குணப்படுத்தப்பட்டு மூன்று நாட்களில் வீடு திரும்பினார். இவர்தான் கொரோனா வைரசின் தொடக்கம்.

    டெல்லி நபர்

    டெல்லி நபர்

    அதன்பின் டெல்லியில் இருந்து சென்னை வந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கொரோனா வந்தது. இவர் சென்னையில் ஒரு வாரம் சுற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு எப்படி கொரோனா வந்தது என்று உறுதி செய்யப்படவில்லை. இவர் மூலம் தமிழகத்தில் பலருக்கு கொரோனா பரவி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

    கொரோனா

    கொரோனா

    இவருக்கு அடுத்தபடியாக அயர்லாந்தில் இருந்து வந்த மாணவர் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டது. இவருக்கு கொரோனா பாதிப்புடன் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் ஸ்பெயின் நாட்டில் இருந்து கோவை திரும்பியவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கோவையைச் சேர்ந்த 25 வயது மாணவி ஸ்பெயின் நாட்டில் பெங்களூரின் வழியே தமிழகம் வந்தார்.

    உறுதி செய்யப்பட்டது

    உறுதி செய்யப்பட்டது

    இவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன்பின் தமிழகத்தில் கொரோனா 2 தாய்லாந்தை சேர்ந்த நபர்களுக்கு ஏற்பட்டது. இவர்கள் இருவரும் தற்போது ஈரோட்டில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதேபோல் தமிழகத்தில் இருக்கும் நியூசிலாந்தை சேர்ந்த பயணி ஒருவருக்கும் கொரோனா ஏற்பட்டது. ஒரே நாளில் இவர்கள் மூன்று பேருக்கும் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    கலிபோர்னியா எப்படி

    கலிபோர்னியா எப்படி

    இந்த நிலையில் நேற்று இரவு கலிபோர்னியாவில் இருந்து வந்த 65 வயது பெண்ணுக்கு கொரோனா உள்ளது உறுதி செய்யப்பட்டது. இவருக்கு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துபாயில் இருந்து வந்த 43 வயது ஆண் ஆகிய இருவருக்கு கொரோனா தொற்று உள்ளது. இவருக்கு திருநெல்வேலியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அதேபோல் 11 மற்றும் 12 நபர்கள் இருவரும் திருப்பூர் மற்றும் சென்னையை சேர்ந்தவர்கள். இவர்களும் வெளிநாடு சென்று திரும்பியவர்கள். கடைசி மதுரை நபர் மட்டும் வெளிநாடு, வெளி மாநிலம் செல்லாதவர்.

    ஒரே ஒற்றுமை

    ஒரே ஒற்றுமை

    இவர்கள் எல்லோருக்கும் ஒரே ஒற்றுமை, இவர்கள் எல்லோரும் வெளிநாட்டில் இருந்து தமிழகம் வந்தவர்கள். அதாவது இவர்கள் எல்லோருக்கும் வெளிநாட்டில் கொரோனா ஏற்பட்டு, பின் தமிழகம் வந்த பின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இவர்கள் யாருக்கும் கொரோனா ஏற்படவில்லை. இது ஸ்டேஜ் 1 வகை கொரோனா பரவல் ஆகும்.

    வெளிநாடு எப்படி

    வெளிநாடு எப்படி

    வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் நபருக்கு கொரோனா இருந்தால் அது ஸ்டேஜ் ஒன்று. அதாவது இவரை விமான நிலையத்திலேயே கண்டுபிடித்து, அப்படியே மருத்துவமனைக்கு அழைத்து செல்வார்கள். இதுதான் ஸ்டேஜ் ஒன்று. தமிழகத்தில் இதுதான் தற்போது நிலை. தமிழகத்தில் இன்னும் ஸ்டேஜ் 2 கூட வரவில்லை. ஸ்டேஜ் 2 என்பது வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் நபர் ஒருவர் மூலம் அவரின் உறவினர்களுக்கும் வைரஸ் தாக்கினால் அதுதான் ஸ்டேஜ் 2.

    ஸ்டேஜ் 1

    ஸ்டேஜ் 1

    தமிழகத்தில் கொரோனா வந்த இந்த 9 பேரில் யாருடைய உறவினர்களுக்கும் இன்னும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை. இது ஒருவகையில் நிம்மதியான செய்திதான். ஆனாலும் இவர்களின் உறவினர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இவர்களுக்கு நோய் அறிகுறிகள் உள்ளதா என்று தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது.

    English summary
    Coronavirus: The common thing between 9 patients in Tamilnadu so far.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X