சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆண்களைத்தான் அதிகமாக பாதிக்கிறது.. 45+ என்றால் சிக்கல்.. கொரோனா புள்ளி விவரம் என்ன சொல்கிறது?

கொரோனா வைரஸ் பொதுவாக ஆண்களையும், வயதானவர்களையும்தான் அதிகம் பாதிக்கிறது என்று தற்போது வரை வெளியாகி உள்ள புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா வைரஸ் பொதுவாக ஆண்களையும், வயதானவர்களையும்தான் அதிகம் பாதிக்கிறது என்று தற்போது வரை வெளியாகி உள்ள புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.

கொரோனா வைரஸ் காரணமாக பலி எண்ணிக்கை கடந்த ஒரு வாரமாக அதிகரித்து வருகிறது. சீனாவில் இந்த வைரஸ் வேகம் குறைந்து இருந்தாலும் இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அதேபோல் இந்தியாவிலும் இந்த வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தோர் எண்ணிக்கை 298 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுக்க 278,469 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.11554 பேர் இந்த வைரஸால் பலியாகி உள்ளனர்.

 ஆண்களை அதிகம்

ஆண்களை அதிகம்

இந்த நிலையில் இந்த கொரோனா வைரஸ் அதிகமாக ஆண்களைத்தான் பாதிக்கிறது. உலகம் முழுக்க கொரோனா வைரஸ் காரணமாக பலியானவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் ஆண்கள்தான் அதிகம். முக்கியமாக ஆசியாவிலும், ஐரோப்பாவிலும் கொரோனா காரணமாக அதிகமாக பலியானது ஆண்கள்தான். ஆண்களை இந்த வைரஸ் மிக எளிதாக தாக்குகிறது. கொரோனா வைரஸ் உள்ளவர்களுடன் பழகியதில் பெண்களை விட ஆண்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 வயது அதிகம்

வயது அதிகம்

அதிலும் ஆண்களில் வயது அதிகம் கொண்டவர்கள்தான் கொரோனா மூலம் பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள். ஆண்களில் அதிகமாக 45+ வயது உள்ளவர்கள் இந்த வைரஸால் பாதிக்கப்படுகிறார்கள். அதே சமயம் 40 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். ஆனால் பலி எண்ணிக்கை 45+ வயதுக்கு அதிகமாக இருந்தால்தான் ஏற்படுகிறது. 45 வயதை தாண்டிய நபர்களுக்குத்தான் சிக்கல் ஏற்படுகிறது

 என்ன புள்ளி விவரம்

என்ன புள்ளி விவரம்

சீனாவில் ஆண்கள்தான் கொரோனா காரணமாக 62% பேர் பலியாகி உள்ளனர். இத்தாலியில் ஆண்கள் 68% பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் ஆண்கள் 57% பேர் பாதிக்கப்பட்டு இருகிறார்கள். ஈராக், ஸ்பெயின் இரண்டிலும் ஆண்கள், அதிலும் வயதான ஆண்கள் 50%க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். இந்தியாவிலும் தற்போது அனுமதிக்கப்பட்டு இருக்கும் நோயாளிகளில் ஆண்கள்தான் அதிகம்.

 பெண்கள் இல்லை

பெண்கள் இல்லை

எல்லா நாடுகளிலும் இந்த வைரஸ் காரணமாக பெண்கள் குறைவான எண்ணிக்கையில் பாதிக்கப்படுகிறார்கள். அதேபோல் குழந்தைகள் மிக குறைவாக பாதிக்கப்படுகிறார்கள். ஆச்சர்யமாக 10-18 வயது சிறுமிகள் மிக மிக சொற்ப எண்ணிக்கையில்தான் உலக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்ட பெண்களும் கூட அதிகமாக 60+ வயதை கொண்ட பெண்கள்தான்.

 வயது வித்தியாசம்

வயது வித்தியாசம்

அதன்படி ஆண்கள் மற்றும் பெண்களில், 80+ வயதுக்கு மேல் இருந்தால் 14.8% பேர் பலியாகிறார்கள். 70-79 வயதுக்குள் இருந்தால் 8.0% பேர் பலியாகிறார்கள். 60-69 வயதுக்குள் இருந்தால் 3.6% பேர் பலியாகிறார்கள். 50-59 வயதுக்குள் இருந்தால் 1.3% பேர் பலியாகிறார்கள். 40-49 வயதுக்குள் இருந்தால் 0.4% பேர் பலியாகிறார்கள். 30-39 வயதுக்குள் இருந்தால் 0.2% பேர் பலியாகிறார்கள். 20-29 வயதுக்குள் இருந்தால் 0.2% பேர் பலியாகிறார்கள் 10-19 வயதுக்குள் இருந்தால் 0.2% பேர் பலியாகிறார்கள்.0-9 வயதுக்குள் யாருமே பலியாகவில்லை.

 சார்ஸ் வந்த போது

சார்ஸ் வந்த போது

இதேபோல் சார்ஸ் நோய் வந்த போதும் ஆண்கள் மற்றும் வயதானவர்கள் தான் அதிகம் பலியானார்கள். சார்ஸ் காரணமாக பலியானவர்களில் 68% பேர் ஆண்கள்தான். மொத்தம் பலியானவர்களில் 60% பேர் 45 வயதை கடந்தவர்கள். சார்ஸ் நோய் தோற்று கொரோனா குடும்பம் வைரஸ் மூலம்தான் பரவியது. அதேபோல் தற்போது அதே கொரோனா குடும்ப வைரஸ் மூலம் பரவும் COVID-19ம் அதே பண்பை கொண்டுள்ளது.

 என்ன காரணம்

என்ன காரணம்

இந்த வைரஸ் காரணமாக ஆண்கள் மற்றும் வயதானவர்கள் அதிகம் பாதிக்க சில காரணங்கள் சொல்லப்படுகிறது.

ஆண்களுக்கான எதிர்ப்பு சக்தி குறைவு

ஆண்களுக்கு அதிக அளவில் உலகில் ஏற்கனவே சர்க்கரை வியாதி உள்ளிட்ட நோய்கள் உள்ளது.

குடிப்பழக்கம், மது பழக்கம்.

ஆண்கள் அதிகமாக எளிதாக மாசு ஏற்பட கூடிய பணிகளை செய்வது

பெண்களுக்கு இயல்பாக இருக்கும் அதிக எதிர்ப்பு சக்தி ஆகியவை காரணமாக இருக்கலாம் என்கிறார்கள்.

English summary
Coronavirus: The epidemic attacks old age people and men a lot - Status report.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X