சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

8 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பு: தமிழகத்தில் பள்ளிகளை தொடர்ந்து கல்லூரிகளுக்கும் விடுமுறையா?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்திருப்பதால் பள்ளிகளைத் தொடர்ந்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிப்பது தொடர்பாக தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Recommended Video

    சூடுபிடிக்கும் தேர்தல் பிரச்சாரம்… கொரோனா பரப்பும் மையமாகிறதா தமிழகம்!

    நாடு முழுவதும் இந்த மாதத்தின் தொடக்கம் முதலே கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிராவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 27,000-த்தை தாண்டி இருக்கிறது.

    தமிழகத்திலும் அதிகரிப்பு

    தமிழகத்திலும் அதிகரிப்பு

    தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,200 ஐ தாண்டியுள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த ஒருநாள் கொரோனா பாதிப்பு 43,000-த்தை தாண்டியிருக்கிறது.

    பள்ளிகளில் பாதிப்பு

    பள்ளிகளில் பாதிப்பு

    தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா தாக்கம் மிக அதிகமாக உள்ளது. தமிழகத்தில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று பரவல் அதிகரித்தது.

    சில வகுப்புகள் மூடல்

    சில வகுப்புகள் மூடல்

    இதனால் நாளை முதல் 9,10,11-ம் வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடரும் எனவும் தெரிவித்துள்ளது தமிழக அரசு.

    கல்லூரிகளுக்கும் விடுமுறை?

    கல்லூரிகளுக்கும் விடுமுறை?

    இதனிடையே சில கல்லூரிகளிலும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனையடுத்து பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிப்பது தொடர்பாகவும் தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. இது தொடர்பான அறிவிப்பும் நாளை அல்லது ஓரிருநாளில் வெளியாகும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    English summary
    After the shut down of Schools, Now Tamilnadu Govt is considering to close All Colleges due to the increase of Coronavirus Cases.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X