தமிழகத்தில் இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு- கடும் கட்டுப்பாடுகள் அமலாகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கொரோனா தாக்கத்தைக் கட்டுப்படுத்த இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. இதனையொட்டி தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

Recommended Video

    லாக் டவுனை மீறினால் கடும் நடவடிக்கை - அரசு எச்சரிக்கை

    நாடு முழுவதும் கொரோனா தொற்று நோய் படுதீவிரமாக பரவுகிறது. இதனால் மாநிலங்களில் 144 தடை உத்தரவு, சீல் வைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றன.

    Coronavirus: TN to be under lockdown, Sec 144 to be in force

    தமிழகத்திலும் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. இதனால் மக்கள் பொது இடங்களில் ஒன்று கூடுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

    மாவட்ட எல்லைகள் அனைத்தும் மார்ச் 31-ந் தேதி வரை மூடப்படும் நிலையில் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்படவில்லை. உணவகங்கள், மருந்தகங்கள் உள்ளிட்டவை இயங்கும்.

    Coronavirus: TN to be under lockdown, Sec 144 to be in force

    144 தடை உத்தரவை மீறும் நபர்கள் மீது குற்றவியல் பிரிவுகளின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தனியார் நிறுவனங்கள், அரசு ஆசிரியர்கள் வீட்டில் இருந்தே பணி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுவையில் நேற்று இரவு 9 மணி முதல் 144 தடை உத்தரவு அமலாக்கப்பட்ட நிலையில் தமிழகத்திலும் இன்று மாலை முதல் இது நடைமுறைக்கு வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+