தமிழகம் முழுவதும் இன்று 5,647 பேருக்கு கொரோனா உறுதி - 5612 பேர் டிஸ்சார்ஜ்
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,647 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 5,75,017ஆக உயர்ந்துள்ளதாக என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,647 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 5,75,017 பேராக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனாவில் இருந்து இதுவரை 5,19448 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 85 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் பலி எண்ணிக்கை 9,233ஆக உயர்ந்துள்ளது.
உலக அளவில் 3 கோடியே 20 லட்சம் பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 60 லட்சத்தை எட்டப்போகிறது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 48 லட்சமாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,75,017 பேராக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 5,647 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 85 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9,233 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்புடன் 46336 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 5,19,448 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 5,612 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 85 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9233 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை 67,93,843 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 92,166 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 182 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications