சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எகிறி அடிக்கும் கொரோனா கேஸ்கள்.. நிரம்பும் மருத்துவமனைகள்.. விரைவில் தமிழகத்துக்கு "முழு லாக்டவுன்"?

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை அதிகமாகி கொண்டு வரும் நிலையில், தமிழக அரசும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், முழு லாக்டவுனுக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Recommended Video

    # மே1,2 முழு ஊரடங்கு - சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை!

    தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 15,659 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.. தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,81,988 ஆக உயர்ந்துள்ளது.

    ஸ்டெர்லைட் ஆலையின் ஆக்சிஜன் உற்பத்தி.. சென்னை உயர்நீதிமன்றம் கண்காணிக்க தினகரன் வலியுறுத்தல் ஸ்டெர்லைட் ஆலையின் ஆக்சிஜன் உற்பத்தி.. சென்னை உயர்நீதிமன்றம் கண்காணிக்க தினகரன் வலியுறுத்தல்

    இதில், அதிகபட்சமாக சென்னையில் 4,206 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது..சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,09,899 ஆகவும் அதிகரித்துள்ளது.

     மாவட்டங்கள்

    மாவட்டங்கள்

    சென்னைக்கு அடுத்தபடியாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,242 பேருக்கும் கோவை மாவட்டத்தில் 1038 பேருக்கும், திருவள்ளூரில் 885 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.. தற்போது இரவுநேர ஊரடங்கும் அமலில் உள்ளது... இதுபோக, பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்தும் இந்த தொற்று எண்ணிக்கை குறையவில்லை.. ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன... அதேபோல, பியூட்டி பார்லர்கள், சலூன்களும் மூடப்பட்டுள்ளன... வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

    பாதிப்பு

    பாதிப்பு

    ஓட்டல்கள், டீக்கடைகளில் யாரும் உட்கார்ந்து சாப்பிட அனுமதி இல்லை.. பார்சல் மட்டுமே உண்டு.. இவ்வளவு கட்டுப்பாடுகள் இருந்தும் தொற்று பாதிப்பை குறைக்க முடியாத சூழல் உள்ளது.. கடந்த வருடம் இதுபோலவேதான் ஒரு நெருக்கடி தொற்று காரணமாக நம்மை சூழ்ந்தது.. அப்போது முதல்வர், அதிகாரிகளுடன் கலந்து பேசி டக்டக்கென ஒரு முடிவு எடுத்தார்.. இது சம்பந்தமான கூட்டம் தினமும் தலைமை செயலகத்தில் நடந்தது.

     காபந்து

    காபந்து

    இப்போது அப்படி இல்லை.. காபந்து அரசு உள்ளது.. அதனால்தான், சுகாதாரத்துறை சார்பில் தொடர்ந்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.. இந்த தொற்று பாதிப்பு அடுத்த 10 நாட்களில் அதிகரிக்கும் என்றும் ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது..

     முழு பொது முடக்கம்?

    முழு பொது முடக்கம்?

    எனவே, பாதிப்பு அடுத்தடுத்த நாட்களில் தீவிரமடையும் நிலையில் முழு பொது முடக்கம் அறிவிக்கப்படலாமா என்ற ஆலோசனை தலைமை செயலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம். அந்த வகையில், அடுத்த ஓரிரு தினங்களில் முழு பொதுமுடக்க அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

     ரிசல்ட்

    ரிசல்ட்

    இதனிடையே, மே 2ம் தேதிக்குப் பிறகும் முழு லாக்டவுனை யாரும் விரும்பவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். எனவே முழு லாக்டவுன் அமல்படுத்துவது எந்த வகையில் நடைபெறும் என்பதிலும் குழப்பம் நிலவுகிறது. யாருக்குமே முழு லாக்டவுனில் உடன்பாடும் இல்லை.

     வாய்ப்புகள்

    வாய்ப்புகள்

    அதேசமயம், மக்களில் சிலர் கட்டுக்குள் வர மறுப்பதால் நோய் பாதிப்பும் அதிகரித்தபடியே உள்ளதால் குறிப்பிட்ட காலத்துக்கு முழு லாக்டவுன் அமலாகக் கூடிய வாய்ப்புகளை நிராகரிக்க முடியாது. குறைந்தபட்சம் வார இறுதியில் அதாவது சனி, ஞாயிற்றுக்கிழமைகளுக்கு மட்டுமாவது முழு லாக்டவுன் அமல்படுத்தப்படக் கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

    English summary
    Coronavirus: When will complete Curfew in Tamilandu
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X