என் கணவரின் கடைசி ஆசை.. கீழ்ப்பாக்கத்தில் மீண்டும் அடக்கம் செய்யுங்கள்- சென்னை டாக்டரின் மனைவி
சென்னை: கொரோனாவால் பாதிகப்பட்டு மரணித்த டாக்டரின் கடைசி ஆசைப்படி அவரது உடலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் முறைப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்று அவரது மனைவி ஆனந்தி, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உருக்கமாக வேண்டுகோள் விடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்படுகிறது.
Recommended Video
சென்னையை சேர்ந்த மருத்துவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரது உடலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்ய சமூக விரோதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அத்துடன் மருத்துவரின் உடலை ஏற்றி வந்த வாகனத்தையும் அதில் இருந்தவர்களயும் இந்த சமூக விரோத கும்பல் கொடூரமாக தாக்கியது. இதனையடுத்து அந்த மருத்துவரின் உடல் சென்னை அருகே வேலப்பன்சாவடியில் சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்யப்பட்டது.
என் கணவரின் கடைசி ஆசை.. கீழ்ப்பாக்கத்தில் முறைப்படி அடக்கம் செய்யுங்கள்-டாக்டர் மனைவி உருக்கம் #Covid_19india #TamilNadu pic.twitter.com/tr4SyIYmTF
— Oneindia Tamil (@thatsTamil) April 21, 2020
மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த கொடுஞ்செயல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மருத்துவரின் மனைவி ஆனந்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமது கணவர் மரணிக்கும் முன்பாக தாம் இறந்தால் கீழ்ப்பாக்கம் கல்லறையில் முறைப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதற்காகவே நாங்கள் அனுமதியும் பெற்றிருந்தோம். ஆனால் சில நிகழ்வுகளால் அது நடைபெறவில்லை. தற்போது வேலப்பன்சாவடியில் சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்யப்பட்ட கணவரின் உடலை அவரது இறுதி விருப்பப்படி சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறையில் முறைப்படி அடக்கம் செய்ய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க உருக்கமுடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications