Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கண்களைப் பறிக்கும் கலர் கலர் பூங்காக்கள்… நம்ம வடசென்னை ஏரியாவா இது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மேயராக பிரியா ராஜன் பதவியேற்ற ஒரே ஆண்டில் இந்தப் பெருநகர சென்னை மாநகராட்சி மாபெரும் மாற்றத்தை அடைந்துவருகிறது. திரும்பிய திசை எல்லாம் கலர்ஃபுல் காட்சிகளால் நிரம்பி வழிகிறது நம்ம சென்னை. அந்தளவுக்குப் பார்த்துப் பார்த்து ஒவ்வொரு மாற்றமும் செய்யப்பட்டு வருகிறது.

 Corporation parks in North Chennai are getting a new look

சமீபத்தில்தான் முதல்வர் ஸ்டாலின் 18 கோடியில் புனரமைக்கப்பட்ட திருவிக பூங்காவைத் திறந்துவைத்தார். இந்தத் திருவிக பூங்கா கடந்த சில ஆண்டுகளாக மெட்ரோ பணிகள் நடைபெற்று வந்ததால், அலங்கோலமாகக் கிடந்தது. இப்போது வேலைகள் அனைத்து முடிந்ததால், முழுமையாகப் புனரமைக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்டுள்ளது. இதில் அதிசயம் என்னவென்றால் இந்தப் பூங்காவின் அடியில்தான் மெட்ரோ ரயில் தடம் செல்கிறது.

அதாவது மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டம் 45.1 கி.மீ. நீளத்தில் இரண்டு வழித்தடங்களைக் கொண்டுள்ளது. இதில் வழித்தடம் இரண்டானது சென்னை சென்ட்ரலில் இருந்து தொடங்கி, செனாய் நகரிலுள்ள திருவிக பூங்காவுக்குக் கீழே பூமிக்கு அடியில்தான் செல்கிறது. அந்த வழித்தடத்தின் எந்த சுவடும் தெரியாமல் மேலே பூங்கா வடிவமைக்கப்பட்டுள்ளது. இது நவீன கட்டடக் கலையின் அதிசயமாகக் காட்சி தருகிறது.

 Corporation parks in North Chennai are getting a new look

இப்படி சென்னையைச் சுற்றி உள்ள பல பூங்காக்கள் இந்த ஒரு ஆண்டுக்கால ஆட்சியில் புதிய பொலிவைப் பெற்றுவருகின்றன. பசுமையான மரங்கள், மிக அழகான நடைபாதைகள், வண்ணமயமான கட்டிடங்கள், ஓவியங்கள் நிறைந்த சுற்றுச் சுவர்கள் எனப் பூங்காக்களின் தோற்றமே அதிநவீனமாக மாற்றமடைந்துள்ளன.

பெரும்பாலும் இதுவரை இருந்த ஆட்சியாளர்கள் சென்னை என்றால் தென்சென்னையை மட்டுமே பிரதானமாகக் கொண்டு பல மாற்றங்களைச் செய்வது வாடிக்கை. ஆனால், அதிலும் மேயர் பிரியாவின் காலம் தனித்துவமானது. அவர் தென்னை சென்னைக்கு இணையாக வடசென்னையின் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

 Corporation parks in North Chennai are getting a new look

இதற்காகவே பெருநகர சென்னை மாநகராட்சி பல திட்டங்களை முன்னெடுத்துள்ளது. அதாவது, 'சிங்கார சென்னை 2.ஒ', 'சீர்மிகு சென்னை' , 'பசுமை சென்னை' என ஒவ்வொரு திட்டத்தின் கீழாக ஒவ்வொரு பகுதியும் மாற்றத்தைக் கண்டுவருகிறது.

இவரது நடவடிக்கையால் புதிய பொலிவைப் பெற்றுள்ளது மணலி மண்டலம் வார்டு 18க்கு உட்பட்ட பூங்கா ஒன்று. இது விமலாபுரம் 2வது தெருவில் உள்ளது. அங்கே இப்போது புதியதாக மரக்கன்றுகளை நட்டுள்ளது பெருநகர சென்னை மாநகராட்சி.

 Corporation parks in North Chennai are getting a new look

மேலும் சுற்றுச் சுவர்களில் மிக நேர்த்தியான வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. நடைபாதைகள் முழுக்க மிகச் சிறப்பாகச் சீரமைத்துள்ளனர். இந்த நடைபாதைகள் முன்பைப்போல சிமெண்ட் தரை அமைக்காமல் சீமை ஓடுகள் ஸ்டைலில் டைல்ஸ்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த டைல்ஸ் அனைத்தும் வழவழப்பாக இல்லாமல், நடக்கும் போது பிடிமானத்தைத் தருவதைப் போன்று சொர சொரப்பாக அமைத்துள்ளன.

மேலும் நடைபாதை இருமருங்கிலும் உள்ள பக்கவாட்டும் கட்டைகளில்கூட கலர் கலராக பெயிண்ட் அடித்திருப்பதால், பார்க்கவே பூங்கா பளீச் என்று கண்களைக் கவர்கின்றது. இந்தப் பூங்காவில் அடிக்கப்பட்டுள்ள பெயிண்ட் முழுக்க ஒரே நிறமாக இல்லாமல் தனித்தனியே பிரித்துக் காட்டும்படி, விதவிதமான வண்ணத்தில் தீட்டியுள்ளனர். இது அதிகம் மனதை மயக்குவதாக உள்ளது என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

 Corporation parks in North Chennai are getting a new look

இதைப் பார்த்துவிட்டு அப்படியே பொடிநடையாக நடந்து தண்டையார்பேட்டை வந்தால் நம்மை வரவேற்கிறது புதிய உயிர் பெற்றுள்ள கார்பைட் காலனி பூங்கா. இங்கே மிக அழகான புல்தரை அமைக்கப்பட்டுள்ளது. புல்தரையின் நடுவே நிழல் தரும் அழகான மரம் மனதை அப்படியே ஈர்க்கிறது.

மேலும் சுவர் ஓரமாக உட்கார்ந்து புகைப்படங்கள் எடுக்கும்படி, மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பூங்கா முழுக்க பச்சைப் பசேல் என்று வர்ணிக்க முடியாத அளவு பசுமை தேவதை பாய் விரித்துப் படுத்திருக்கிறாள் என்றே சொல்ல வேண்டும்.

 Corporation parks in North Chennai are getting a new look

இதே வடசென்னையைச் சேர்ந்த பகுதிதான் மாதவரம். அங்கே உள்ள 25வது வார்டில்தான் மணி நகர் பூங்கா இருக்கிறது. இங்கேயும் முழு வீச்சில் வேலைகள் நடைபெற்றுள்ளன. சுவருக்கு வண்ணம் அடித்தல், குழந்தைகளைக் கவரும்படி டோரா பொம்மைகளை ஓவியமாக வரைதல், பாதைகளைச் சீரமைத்தல், குழந்தைகள் விளையாடும் சறுக்கு கம்பம், ஊஞ்சல் எனப் பல உபகரணங்களையும் பழுது நீக்கி அமைத்தல் எனப் பல பணிகள் நடைபெற்றுள்ளன.

இந்தப் பூக்காக்கள் அனைத்திலும் டாப் டக்கராக இருப்பது திருவொற்றியூர் பூங்காதான். வார்டு 1க்கு உட்பட்ட தாழங்குப்பம் பகுதியில் உள்ள பூங்கா, உண்மையில் கண்களைக் கவரம் ஜிலுஜிலு ரகம். அப்படியே பூங்கா முழுவதும் பச்சைப் போர்வையைப் போர்த்தியதைப்போல் குளுகுளு என்று உள்ளது என்றால் சும்மாவா?

இதை எல்லாம் பார்த்து திரும்பும் வழியிலிருந்த ராயபுரம் பூங்காவுக்குள்ளும் அப்படியே நுழைந்தோம். நம் எதிர்பார்ப்பின் அளவை எகிற வைத்தது இந்தப் பூங்கா. இங்கே இந்தக் கோடையைக் குளிர வைப்பதைப் போல் சிறப்பான நீரூற்று ஒன்று பொங்கி வழிந்தது. இரவு நேரத்தில் அந்த நீரூற்று விதவிதமான வண்ண ஒளிகளை அப்படியே உமிழ்கின்றது.

 Corporation parks in North Chennai are getting a new look

மேலும் பலவிதமான குரோட்டன் செடிகளும் நடப்பட்டுள்ளன. அழகழகான பூஞ்செடிகளும் பூத்துக் குலுங்குகின்றன. ஆகவே இந்தப் பூங்காவைப் பகலிலும் ரசிக்கலாம், அதைவிட அதிகமாக இரவிலும் ரசிக்கலாம். ஆக, டு இன் ஒன் ரகத்தில் உள்ளது ராயபுரம் பூங்கா.

இவற்றை எல்லாம் பார்த்த பிறகு கோடம்பாக்கம் பூங்கா குறித்த தகவல் கிடைத்தது. உடனே அங்கேயும் சென்றோம். அங்கே வந்தால், பச்சை மற்றும் வெள்ளை நிறங்களில் கண்களை அதிகம் உறுத்தாதபடி நம்மை வரவேற்கிறது வார்டு 137இல் உள்ள 12ஆவது செக்டார் பூங்கா. இங்கே குழந்தைகள் விளையாடுவதற்கான விளையாட்டு உபகரணங்களும் அமைக்கப்பட்டுள்ளன என்பது கூடுதல் சிறப்பு.

 Corporation parks in North Chennai are getting a new look

வெறும் பூங்காக்களை அழகாக்கிவிட்டால் போதுமா? அங்கே கூடும் பொதுமக்கள் தங்களின் இயற்கை உபாதைகளைச் சரியாகச் செய்ய வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டாமா? அதுதானே தலையாய பிரச்சினை.

அதற்கும் வழி சொல்கிறது பெருநகர சென்னை மாநகராட்சி. கடந்தகால ஆட்சி வரை சென்னை நகரில் பயணிக்கும் போது தங்களின் அவசர உபாதைகளுக்குச் சரியான இடங்கள் இல்லாமல் பொதுமக்கள் தவித்துவந்தனர். அதைக் கருத்தில் கொண்டு மேயர் பிரியா பல இடங்களில் பொதுக்கழிப்பிடங்களைக் கட்டி வருகிறார்.

 Corporation parks in North Chennai are getting a new look

அதாவது தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், பெருநகர சென்னை மாநகராட்சி இதுவரை 366 புதிய கழிப்பறைகளைக் கட்டியுள்ளது. மேலும் 352 இடங்களில் புதிய கழிப்பறைகள் கட்டப்பட உள்ளன என அதிகாரப்பூர்வமாக மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது பெருநகர சென்னை மாநகராட்சி, கழிப்பிடங்களை 'ஒப்பனை அறை' என்று குறிப்பிட்டு வருகிறது. திருவொற்றியூர் மண்டலம் தொடங்கி மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, இராயபுரம், திருவிக நகர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு,பெருங்குடி, சோழிங்கநல்லூர் வரை மொத்தம் 15 மண்டலங்களில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இத்தனைப் பணிகளும் மேயர் பிரியா மேற்கொண்டுள்ள பணிகளில் ஒரு பகுதிதான் என்பது ஆச்சரியம் கலந்த உண்மை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+