ஆவடியில் உட்கார்ந்த இடத்திலேயே 28 லட்சம் சம்பாதித்த தம்பதி.. வாடகைக்கு குடியிருந்தவருக்கு ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசு வேலை வாங்கித்தருவாக ஒரு போர்டு மாட்டி உட்கார்ந்தால்.. உட்கார்ந்த இடத்திலேயே பல லட்சம் பார்க்கலாம் என்று கிண்டலாக சொல்கிறார்கள். வடிவேலு எப்படி ஒரே நாளில் கோடீஸ்வரன் ஆகலாம் என்று விளம்பரம் செய்வாரோ அதுபோல் , அதுபோல் அரசு வேலை வாங்கித்தருவதாக சிலர் வாயிலேயே வடை சுடுகிறார்கள்.. அவர்களை நம்பி பலர் லட்சக்கணக்கில் பணத்தை தொலைக்கிறார்கள். அப்படித்தான் ஆவடி அருகே அரசு வேலை வாங்கித்தருவாக ஒரு தம்பதி 28 லட்சம் மோசடி செய்திருக்கிறது.

அரசு வேலையை பெற வேண்டும் என்றால் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித்தேர்வுகளை எழுத வேண்டும். அதேபோல் ஆசிரியர் வேலை வேண்டும் என்றால் டிஆர்பி எனப்படும் ஆசிரியர் தேர்வுவாரியத்தின் தேர்வை எழுத வேண்டும். வங்கிகளில் வேலைக்கு சேர வேண்டும் என்றாலும் வங்கித்தேர்வுகளை எழுத வேண்டும். இதேபோல் தான் ரயில்வே, ராணுவம், போலீஸ் என எந்த அரசு துறை என்றாலும் தேர்வு எழுதி மதிப்பெண் பெற்று தான் சேர முடியும்.

Couple in Avadi earns 28 lakhs just sitting there A twist for a tenant who was hoping for a job

அதிகாரிகளின் பெயரில் மோசடி

ஆனால் சிலர் எளிதாக பணம் கொடுத்து அரசு வேலையில் சேர முடியும் என்று ஆசையை தூண்டுகிறார்கள். அமைச்சரை தெரியும், ஐஏஎஸ் அதிகாரியை தெரியும், ஐபிஎஸ் அதிகாரியை தெரியும். ஏற்கனவே பலருக்கு வேலை வாங்கி கொடுத்துள்ளேன் என்று நம்பிக்கையாக பேசுவார்கள். இதற்கு சில அரசியல் புள்ளிகளும் உடந்தையாக இருப்பதால், மோசடிகள் எளிதாக நடக்கின்றன. அப்படியான ஒரு மோசடி சம்பவம் தான் ஆவடியில் நடந்துள்ளது.

28 லட்சம் பணம் மோசடி

சென்னை ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் சரஸ்வதி நகரில் 35 வயதாகும் அஜித்குமார் என்பவர் அங்குள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள கார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்த இவர் கொரோனா காலத்தில் வேலையை இழந்துவிட்டார். இதையடுத்து அவருக்கு கம்பெனியில் இருந்து செட்டில்மெண்ட் பணம் வந்தது. இதை அறிந்த வீட்டின் உரிமையாளரான கோபிநாத் (43) மற்றும் அவரது மனைவி சிவகாமி (41) இருவரும், எங்களுக்கு ரயில்வே துறையில் பெரிய அதிகாரிகளை தெரியும், உனக்கு ரயிலில் டிக்கெட் பரிசோதகர் வேலை வாங்கி தருகிறோம் என ஆசை வார்த்தை கூறியிருக்கிறார்கள். இதை நம்பிய அஜித்குமார் கோபிநாத் வங்கி கணக்குக்கு ரூ.28 லட்சத்தை அனுப்பிவிட்டார்.

டிக்கெட் பரிசோதகர் பணி

இதையடுத்து அஜித்குமாரின் இ-மெயிலுக்கு போலியான டிக்கெட் பரிசோதகர் பணி ஆணையை அனுப்பியிருக்கிறார்கள். மேலும் கோபிநாத்தின் மனைவி சிவகாமி டிக்கெட் பரிசோதகர் சீருடை மற்றும் சிறிய மடிக்கணினி ஆகியவற்றை அஜித்குமாரிடம் கொடுத்திருக்கிறார். அஜித்குமார் பணித்தேர்வுக்கான ஆணையை ரயில்வே அலுவலகத்துக்கு எடுத்து சென்றபோது அது போலியான பணி நியமன ஆணை என தெரிய வந்தது.

ஆவடி தம்பதி கைது

இதுகுறித்து அஜித்குமார் ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட கோபிநாத் மற்றும் அவரது மனைவி சிவகாமி ஆகிய இருவரையும் நேற்று கைது புழல் சிறையில் அடைத்தனர்.

ஏமாறக்கூடாது

இதுபோன்ற போலியான அரசு வேலைக்கான ஆணையை அனுப்பி, வேலை கிடைத்துவிட்டதாக நம்ப வைப்பார்கள்.. இப்படிப்பட்ட மோசடிகளை நம்பி, நீங்கள் ஏமாந்துவிட வேண்டாம். இப்போது மோசடிகள் எல்லாம் மிகவும் நுட்பமாக நடப்பதால் மிக கவனமாக இருக்க வேண்டும். யாராவது ஒருவர் அரசு வேலை இப்படித்தான் வாங்கினேன் என்று பேச வைத்து உங்களை ஏமாற்றக்கூடும். எச்சரிக்கையாக இருந்தால் பண மோசடியில் இருந்து தப்பிக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+