காதலியை பெட்ரோல் டேங்கில் அமர வைத்து எல்லை மீறிய இளைஞர்! திருச்சி ஹைவேயில் முகம் சுளித்த வாகன ஓட்டிகள்
சென்னை: மதுராந்தகம் சுங்கச்சாவடி அருகே, தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன் தினம் இரவு, காதல் ஜோடி ஒன்று முகம் சுளிக்கும் வகையில், எல்லை மீறிய செயலில் ஈடுபட்டுக்கொண்டு பைக்கில் பயணம் செய்த வீடியோ காட்சி, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில் இருப்பது இதுதான்: காதல் ஜோடி ஒன்று பைக்கில் பயணம் செய்கிறது. அவர்கள் ஹெல்மெட்டும் அணியவில்லை. அது மட்டுமா.. பெண்ணை அந்த காதலன், பெட்ரோல் டேங் மீது அமர வைத்துக்கொண்டு ஆபத்தான முறையில் பைக் ஓட்டிச் செல்கிறார்.

காதல் ஜோடியின் எல்லை மீறிய பயணம்
வாகனங்கள் பரபரப்பாக கிராஸ் செய்து கொண்டிருக்கும் நிலையில், தங்களை மறந்த அந்த ஜோடி, எல்லை மீறிய செயலில் ஈடுபடும் காட்சிகளும் அதில் இடம் பெற்றுள்ளன. இதனை பார்த்த சக வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருக்கிறார்.
காதல் ஜோடியின் இந்த எல்லை மீறிய பயணம் குறித்த வீடியோ வைரல் ஆகி வரும் நிலையில், இதனை பார்த்த நெட்டிசன்கள், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள்.
வாகனத்தின் எண்ணை வைத்து அந்த ஜோடியை பிடித்து போக்குவரத்து சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கையை போலீசார் எடுக்க வேண்டும் என்று பதிவிட்டு வருகிறார்கள்.
நெட்டிசன்கள் சிலர் இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் கருத்து கூறுகையில், 'இந்த காதல் ஜோடி தங்கள் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்பதை உணராதது மட்டுமின்றி சக வாகன ஓட்டிகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக பயணம் செய்வதை பார்க்க முடிகிறது' என்று தெரிவித்து வருகிறார்கள்.
உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
போக்குவரத்து விதி மீறல் மட்டுமின்றி வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடிக்கும் வகையிலும் முகம் சுளிக்கும் வகையிலும் நடந்து கொண்ட காதல் ஜோடிக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கும் பணிகளை போலீசார் தொடங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.
திருச்சி - சென்னை ஹைவேயில் போக்குவரத்து அதிகரிப்பு
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு வாக்களிக்க சொந்த ஊர் சென்ற மக்கள் கடந்த இரு தினங்களாக மீண்டும் சென்னைக்கு திரும்பி வர தொடங்கியுள்ளனர். இதனால், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை வழக்கத்தைவிட படு பிஸியாக உள்ளது. பேருந்துகளில் இடம் கிடைக்காதவர்கள் இரு சக்கர வாகனங்களில் சொந்த ஊர் சென்ற நிலையில், மீண்டும் பைக்குகளிலேயே சென்னை திரும்பி வந்தனர்.
இதனால் திருச்சி - சென்னை ஹைவேயில் கடந்த சில நாட்களாக பைக்கில் வருபவர்கள் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. இத்தகைய நெரிசலான நேரங்களிலும் போக்குவரத்து விதிகளை துளியும் மதிக்காமல் இப்படி அநாகரிகமாகவும் நடந்து கொள்ளும் செயல்கள், பிறருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications