ராமதாசுக்கு அதிர்ச்சி! பாமகவின் மாம்பழம் சின்னம் வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.. அன்புமணி குஷி!
சென்னை: மாம்பழம் சின்னத்தை முடக்க கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் தன்னை பாமகவின் தலைவராக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையினையும் நிராகரித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தேர்தல் ஆணையத்தை அணுகுமாறு ராமதாஸ் தரப்புக்கு உரிமையியல் நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
முன்னதாக வழக்கில் இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் இன்று நீதிமன்றத்தில் விளக்கமளிக்கப்பட்டது. அதில் தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால் சின்னத்தை நீதிமன்றத்தால் முடக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.

பாமகவில் தந்தை மகன் மோதல்
பாமகவில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ்க்கும் அவரது மகனும் பாமக தலைவருமான அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இரு தரப்பும் கட்சிக்கு உரிமை கொண்டாடினர். ஆவணங்களின் அடிப்படையில் பாமகவின் மாம்பழம் சின்னம் மற்றும் கொடி ஆகியவற்றை அன்புமணி தரப்பே பயன்படுத்தலாம் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து பாமக நிறுவனர் ராமதாஸ் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், எதன் அடிப்படையில் அன்புமணிக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்கியது. தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் ஒரு ஃபிரண்ட்லி மேட்ச் ஆடியுள்ளது என்று கருத்து கூறியது.
ராமதாசின் கோரிக்கை தவறானது
மேலும், சின்னம் தொடர்பாக மீண்டும் சிவில் நீதிமன்றத்தை நாடி இரண்டு நாட்களுக்குள் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சிவில் நீதிமன்றம் மனு தாக்கல் செய்யப்பட்ட அடுத்த மூன்று நாட்களுக்குள் வழக்கை விசாரித்து முடிவு சொல்ல வேண்டும் எனவும் உத்தரவிட்டது. இதன்படி ராமதாஸ் தரப்பில் சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் வைத்த வாதத்தில், தேர்தல் நடைமுறை அமலில் இருப்பதால் பாமகவின் சின்னத்தை முடக்க முடியாது. அங்கீகாரம் இல்லாத பாமகவால் மாம்பழம் சின்னத்தை உரிமையாக கோர முடியாது. ராமதாஸின் கோரிக்கையே தவறானது.
தள்ளுபடி செய்த நீதிமன்றம்
அன்புமணி அல்லது ராமதாஸ் என்ற தனிநபர்களுக்காக மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. தேர்தல் நடைமுறை அமலில் இருப்பதால் சின்னத்தை முடக்க நீதிமன்றத்திற்கு அனுமதியில்லை. பொது சின்னமான மாம்பழத்திற்கு முதலில் உரிமை கோரியவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்று வாதம் முன்வைக்கப்பட்டது. இந்த வழக்கில் இன்று மாலைக்குள் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உரிமையியல் நீதிமன்றம் தெரிவித்தது.
அதன்படி தீர்ப்பளித்த உரிமையியல் நீதிமன்றம், ராமதாஸ் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தன்னை பாமகவின் தலைவராக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையினையும் நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டது. மேலும் தேர்தல் ஆணையத்தை அணுகுமாறு ராமதாஸ் தரப்புக்கு உரிமையியல் நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவு ராமதாஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications