சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15981 பேருக்கு கொரோனா.. 146 பேர் பலி.. 19,785 பேர் டிஸ்சார்ஜ்

Google Oneindia Tamil News

சென்னை: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15981 பேருக்கு கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளன.

பண்டிகை நாட்கள் காரணமாக நாடு முழுக்க மக்கள் வெளியே செல்வதும், சுற்றுலாத்தலங்களுக்கு செல்வதும் அதிகரித்து உள்ளது. இதனால் கொரோனா கேஸ்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பண்டிகை நாட்களில் பரவிய கொரோனா கேஸ்கள் இன்னும் 2 வாரத்திற்குள் எதிரொலிக்கும், 2 வாரத்திற்கு பின் கேஸ்கள் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஇஅதிமுக பொன் விழா ஆண்டு கொண்டாட்டம்.. சிறப்பு மலரை வெளியிடும் ஓபிஎஸ்- ஈபிஎஸ் ! அஇஅதிமுக பொன் விழா ஆண்டு கொண்டாட்டம்.. சிறப்பு மலரை வெளியிடும் ஓபிஎஸ்- ஈபிஎஸ் !

ஏற்கனவே இந்தியாவில் மூன்றாம் அலை அக்டோபர் இறுதியில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. இருப்பினும் கடந்த ஒரு வாரமாக இந்தியாவில் தினசரி கேஸ்கள் குறைந்து கொண்டே வருகின்றன.

இந்தியா

இந்தியா

கடந்த இரண்டு நாட்களாக 16 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா கேஸ்கள் பதிவான நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15981 பேருக்கு கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளன. 3,40,66,760 பேருக்கு இதுவரை இந்தியாவில் கொரோனா ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 146 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். 1,89,342 பேர் இந்தியாவில் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். 4,52,156 பேர் இதுவரை கொரோனா காரணமாக இந்தியாவில் பலியாகி உள்ளனர்.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா

அதே சமயம் மகாஷ்டிராவில் இரண்டு நாட்களாக 2200க்கும் அதிகமாக பதிவாகி வந்த கொரோனா கேஸ்கள் திடீரென குறைந்துள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா காரணமாக 65,89,982 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு புதிதாக 1,553 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 29,627 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். இதுவரை 1,39,760 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். மொத்தமாக 64,16,998 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். மேலும் புதிதாக 26 பேர் பலியாகி உள்ளனர்.

தமிழ்நாடு

தமிழ்நாடு

தமிழ்நாட்டில் பண்டிகை நாட்களுக்கு இடையிலும், தளர்வுகள் கொண்டு வரப்பட்ட பின்பும் கூட கொரோனா கேஸ்கள் அதிகரிக்கவில்லை. தொடர்ந்து தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்கள் குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக 26,85,874 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.தமிழ்நாட்டில் புதிதாக 1,233 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 35,884 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 26,34,968 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு 15,022 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். கடந்த 24 மணி நேர்தத்தில் தமிழ்நாட்டில் 15 பேர் பலியாகி உள்ளனர்.

கர்நாடகா

கர்நாடகா

கர்நாடகாவில் கொரோனா காரணமாக 29,83,133பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு புதிதாக 264 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் இதுவரை 37,937 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 29,35,659 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு 9,508 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். கடந்த 24 மணி நேர்தத்தில் கர்நாடகாவில் 6 பேர் பலியாகி உள்ளனர்.

கேரளா

கேரளா

கேரளாவில் இன்னும் முழுமையாக கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்படவில்லை. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 7955 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா காரணமாக 48,46,766 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு 90,949 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். இதுவரை 26,791 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 47,28,497 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். புதிதாக 57 பேர் பலியாகி உள்ளனர்.

English summary
Covid 19: 15981 tested positive for Coronavirus in India in past 24 hours , 146 people died.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X