அய்யோ..மறுபடியும் மொதல்ல இருந்தா? தமிழ்நாட்டுக்குள் மீண்டும் வந்த கொரோனா.. இத்தனை பேருக்கு பாதிப்பா?
சென்னை: சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் தமிழ்நாட்டிலும் 18 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை கூறியுள்ளது. அதே நேரத்தில் வீரியமில்லாத கொரோனா தொற்று என்பதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என கூறப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் மாநிலத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் அதற்கு அடுத்ததாக உலகம் முழுவதும் பரவியது. இந்தியாவில் அடுத்த இரு ஆண்டுகளில் அதன் பாதிப்பு எண்ணிப் பார்க்க முடியாத அளவு இருந்தது.
லட்சக்கணக்கில் உயிரிழப்பு இருந்த நிலையில், இந்தியாவில் கொரோனா தடுப்பூசி திட்டம் தீவிரப்படுத்தப்பட்டது. மருத்துவ கட்டமைப்புகள் மத்திய மாநில அரசுகளின் தீவிர முயற்சி காரணமாக கொரோனா கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

உலகம் முழுவதும் கொரோனா காரணமாக 2020 ஜனவரி ஒன்றாம் தேதி முதல் 2021 டிசம்பர் 31ம் தேதி இடையே கிட்டத்தட்ட 60 லட்சம் மக்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் அதற்குப் பிறகு ஒரு கோடியே 80 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரையில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை இலட்சக்கணத்தை கடந்தது.
இதனையடுத்து மத்திய அரசு சார்பில் கொரோனாவுக்கு கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசிகள் மூன்று தவணைகளாக கொடுக்கப்பட்டது. சுமார் 200 கோடு தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக மத்திய அரசு கூறியது. மேலும் பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போதும் வெளிநாட்டு பயணங்களின் போதும் இந்தியாவில் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கியதை பெருமையாக கூறினார்.
தொடர்ந்து கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் ஓமிக்ரான் உள்ளிட்ட உருமாற்றங்களை சந்தித்தது. அதற்குப் பிறகு அவ்வப்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிப்பதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஹாங்காங்கில் மட்டும் ஏழு நாட்களில் 31 பேர் உயிரிழந்த நிலையில் இந்தியாவிலும் கொரோனா பரவல் சில நாட்களாக அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
தற்போது இந்தியாவில் மீண்டும் சோதனை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் 42 பேருக்கு நோய் தொற்று இருப்பதாக மத்திய அரசின் பொது சுகாதாரத்துறை இணையதளத்தில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் 18 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களான புதுச்சேரியில் 13 பேருக்கும், கேரளாவில் 15 பேருக்கும், கர்நாடகாவில் நான்கு பேருக்கும், மகாராஷ்டிராவில் ஏழு பேருக்கும், டெல்லியில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த எண்ணிக்கையில் தமிழ்நாடு முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழகத்தில் வீரியத்துடன் கூடிய கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை எனவும், வீரியம் இல்லாத கொரோனா பாதிப்பு என்பதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும், மக்கள் பீதி அடைய வேண்டாம் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், 8 முதல் 10 பேருக்கு தினமும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் நிலையில் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என கூறப்பட்டுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications