குட் நியூஸ்.. தமிழகத்தில் மீண்டும் 1,500-க்குள் குறைந்த கொரோனா.. அதிரடியாக சரியும் கேஸ்கள்!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1,467 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. தலைநகர் சென்னை அதிக பாதிப்பில் முதலிடம் பிடித்து வருகிறது. கோவையில் அதிவேகமாக குறைந்து வருகிறது.

குறையும் கொரோனா
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டவது அலை அதிவேகமாக குறைந்து வந்தது. தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கையும், கடுமையான ஊரடங்குமே கொரோனாவை குறைத்தது. அதன்பின்னர் இடையில் கொரோனா சற்று ஏற்றம், இறக்கமாக இருந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது மகிழ்ச்சி அளிக்கும் விதமாக கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,467 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு நேற்றை விட குறைவாகும்.

உயிரிழப்பும் மிக குறைவு
இதனால் மொத்த பாதிப்பு 26,69,962 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 16 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் அதிகபட்சமாக கொரோனாவுக்கு 4 பேர் இறந்துள்ளனர். தேனியில் 3 பேர் இறந்தனர், இது தவிர மதுரையில் 2 பேரும், திருவண்ணாமலையில் 2 பேரும் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 35,666 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 1,559 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 26,17,432 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பை விட குணமடைவோர் விகிதம் தொடர்ந்து அதிகமாக இருக்கிறது.

சென்னை முதலிடம்
16,864 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,48,749 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 4,66,87,871 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 181 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா தொடர்ந்து 200-க்கு கீழே குறைந்து ஆறுதல் அளிக்கிறது. ஆனால் தினசரி பாதிப்பில் தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளது.

கோவையில் குறைவு
கோவையில் 155 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோவையில் தொடர்ந்து கொரோனா வேகமாக குறைந்து வருகிறது., செங்கல்பட்டில் 103 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 31 பேருக்கும், மதுரையில் 30 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 24 பேருக்கும், திருவள்ளூரில் 60 பேருக்கும், திருச்சியில் 50 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 74 பேருக்கும், விருதுநகரில் 14 பேருக்கும், ஈரோட்டில் 88 பேருக்கும், சேலத்தில் 51 பேருக்கும், நாமக்கல்லில் 49 பேருக்கும், தஞ்சாவூரில் 90 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

3 மாவட்டங்களில் சதம்
சென்னை, கோவை மற்றும் செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு 100-ஐ கடந்துள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா தொடர்ந்து குறைந்து குறைந்து விட்டது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications