தமிழ்நாடு கொரோனா.. தொடர்ந்து குறையும் பாதிப்பு.. உயிரிழப்பு அதிகரிப்பு.. 3 மாவட்டங்களில் அதிகம்!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1,390 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பில் தலைநகர் சென்னை தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது. கோவை உள்பட பல மாவட்டங்களில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது.

வேகமாக குறையும் கொரோனா
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு 1,500-க்குள் குறைந்த கொரோனா தற்போது 1,400-க்குள் குறைந்து விட்டது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,390 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு நேற்றை விட குறைவாகும். இதனால் மொத்த பாதிப்பு 26,74,233 ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழப்பு அதிகரிப்பு
அதே வேளையில் கொரோனாவுக்கு உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. கொரோனாவுக்கு மேலும் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இது நேற்றைய உயிரிழப்பை விட அதிகம். கோவையில் அதிகபட்சமாக ஒரே நாளில் கொரோனாவுக்கு 7 பேர் இறந்துள்ளனர். சென்னையில் 3 பேர் இறந்தனர், திருவாவூரில் 2 பேரும், மயிலாடுதுறையில் 2 பேரும் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 35,734 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 1,487 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 26,21,986 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பை விட குணமடைவோர் விகிதம் தொடர்ந்து அதிகமாக இருக்கிறது.

சென்னை தொடர்ந்து டாப்
16,513 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,45,846 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் ,80,36,604 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 173 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா தொடர்ந்து 200-க்கு கீழே குறைந்து ஆறுதல் அளிக்கிறது. ஆனால் தினசரி பாதிப்பில் தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளது.

3 மாவட்டங்களில் சதம்
கோவையில் 145 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோவையில் தொடர்ந்து கொரோனா வேகமாக குறைந்து வருகிறது., செங்கல்பட்டில் 107 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 30 பேருக்கும், மதுரையில் 23 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 23 பேருக்கும், திருவள்ளூரில் 55 பேருக்கும், திருச்சியில் 49 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 75 பேருக்கும், விருதுநகரில் 10 பேருக்கும், ஈரோட்டில் 85 பேருக்கும், சேலத்தில் 46 பேருக்கும், நாமக்கல்லில் 60 பேருக்கும், தஞ்சாவூரில் 76 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னை, கோவை மற்றும் செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு தொடர்ந்து 100-ஐ கடந்து வருகிறது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications