ஹேப்பி நியூஸ்.. தமிழகத்தில் தொடர்ந்து சரியும் கொரோனா கேஸ்கள்.. 1,432 பேருக்கு தொற்று உறுதி!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1,432 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. தலைநகர் சென்னை அதிக பாதிப்பில் முதலிடம் பிடித்து வருகிறது. கோவையில் அதிவேகமாக கொரோனா குறைந்து வருகிறது.

தொடர்ந்து குறையும் கேஸ்கள்
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டவது அலை அதிவேகமாக குறைந்து வந்தது. தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கையும், கடுமையான ஊரடங்குமே கொரோனாவை குறைத்தது. அதன்பின்னர் இடையில் கொரோனா சற்று ஏற்றம், இறக்கமாக இருந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது மகிழ்ச்சி அளிக்கும் விதமாக கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,432 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு நேற்றை விட குறைவாகும்.

உயிரிழப்பு அதிகரிப்பு
இதனால் மொத்த பாதிப்பு 26,72,843 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 25 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் அதிகபட்சமாக கொரோனாவுக்கு 4 பேர் இறந்துள்ளனர். கோவையிலும் 4 பேர் இறந்தனர், திருப்பூரில் 3 பேர் இறந்தனர். இது தவிர கிருஷ்ணகிரியில் 2 பேரும், திருவாவூரில் 2 பேரும் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 35,707 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 1,519 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 26,20,499 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பை விட குணமடைவோர் விகிதம் தொடர்ந்து அதிகமாக இருக்கிறது.

சென்னை முதலிடம்
16,637 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,44,832 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 4,69,78,922 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 176 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா தொடர்ந்து 200-க்கு கீழே குறைந்து ஆறுதல் அளிக்கிறது. ஆனால் தினசரி பாதிப்பில் தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளது.

கோவையில் குறைவு
கோவையில் 149 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோவையில் தொடர்ந்து கொரோனா வேகமாக குறைந்து வருகிறது., செங்கல்பட்டில் 110 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 32 பேருக்கும், மதுரையில் 26 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 21 பேருக்கும், திருவள்ளூரில் 57 பேருக்கும், திருச்சியில் 50 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 70 பேருக்கும், விருதுநகரில் 13 பேருக்கும், ஈரோட்டில் 90 பேருக்கும், சேலத்தில் 47 பேருக்கும், நாமக்கல்லில் 47 பேருக்கும், தஞ்சாவூரில் 80 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

3 மாவட்டங்களில் சதம்
சென்னை, கோவை மற்றும் செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு 100-ஐ கடந்துள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா தொடர்ந்து குறைந்து வருவது மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாக இருக்கிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications