Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவிஷீல்டு போட்டது ஒரு குத்தமா? டாக்டர் தரும் ஃபுல் டேட்டா இதோ! யாரும் பயப்பட வேண்டாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்கள் அச்சப்படத் தேவை இல்லை என்று மருத்துவர் சபரி தெரிவித்துள்ளார்.

கோவிஷீல்டு தடுப்பூசி பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்று சில நாள்கள் முன்னதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆஸ்ட்ராஜெனக்கா நிறுவனமும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகமும் இணைந்து இந்தத் தடுப்பூசியைத் தயாரித்தது.

covishield side effects Dr Sabari provides complete data

இதனை சீரம் இஸ்ட்டிட்யூட் ஆஃப் இந்தியா தயாரித்தது. இந்தியாவில் இந்தய்ஜ் தடுப்பூசியை மத்திய அரசு இரண்டு தவணைகளாக இலவசமாக வழங்கியது. சுமார் 200 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

கோவிஷீல்டு தடுப்பூசியைத் தயாரித்த ஆஸ்ட்ராஜெனக்கா நிறுவனம் மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது தொடர்பான விசாரணையில் பிரிட்டன் நீதிமன்றத்தில் இந்நிறுவனம் சில விவரங்களைத் தாக்கல் செய்தது.

அதில், கோவிஷீல்டு தடுப்பூசி அரிதினும் அரிதாக ரத்த உறைதல், ரத்த தட்டுக்கள் குறைதல் போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரிவித்திருக்கிறது. இது இந்தியாவில் பெரும் விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது.

இதனால் இந்த தடுப்பூசியைச் செலுத்திக் கொண்ட மக்கள் மத்தியில் ஒரு அச்சம் பரவியுள்ளது. பலரும் கலக்கத்தில் தவிக்கின்றனர்.

covishield side effects Dr Sabari provides complete data

ஆகவே, இதன் உண்மைத்தன்மை பற்றிப் பல விளக்கங்களை அளித்துள்ளார் டாக்டர் சபரி. அவர் இது பற்றி மிகத் தெளிவான விசயங்களை எளிய மக்களுக்கும் புரியும் படி தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி போட்டது நல்லதா? கெட்டதா?:

டாக்டர் சபரி, "இப்போது மிகச் சர்ச்சையாகப் போய்க் கொண்டிருக்கும் தடுப்பூசி சம்பந்தமான பிரச்சினையை aefi effect என்று சொல்வோம். இந்தப் பிரச்சினையை மருத்துவ மொழியில் adverse effects following immunization என்று சொல்வார்கள்.

இதை மருத்துவம் படிக்கின்ற அனைவரும் ஒரு பாடமாகவே படிப்பார்கள். பொதுவாக ஒரு தடுப்பூசி போடுவதால், என்ன மாதிரியான விளைவுகள் வரும் என்பதைக் குறித்து விளக்கமாக இதில் நாம் படிக்கலாம்.

covishield side effects Dr Sabari provides complete data

அப்படிப் பார்த்தால் எல்லா தடுப்பூசிகளுக்கும் ஏதாவது ஒரு வகையில் சின்ன அளவுக்கு எதிர்வினை இருக்கவே செய்யும். இப்போது கோவிஷீல்டு பற்றிய ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியை இந்தியாவில் உள்ள நிறுவனம்தான் தயாரித்து உலகம் முழுக்க வழங்கி உள்ளது. இப்போது இந்தத் தடுப்பூசி போட்டவர்கள் அனைவரும் அடுத்து என்ன ஆகுமோ என்ற அச்சத்தில் இருக்கிறார்கள்.

அந்தப் பயம் தேவையற்றது. ஏனென்றால், நான் கூட அந்தத் தடுப்பூசிதான் போட்டுக் கொண்டேன். நான்கு முறை போட்டுக் கொண்டுள்ளேன்.

நாங்கள் எல்லாம் முன்களப் பணியாளர்கள். ஆகவே, பொதுமக்கள் போடுவதற்கு முன்பே நாங்கள் அனைவரும் போட்டுக் கொண்டோம்.

covishield side effects Dr Sabari provides complete data

இந்த வழக்கில் என்ன வாதத்தை முன்வைத்திருக்கிறார்கள் என்றால், இந்தத் தடுப்பூசி போட்ட பிறகு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. சிலர் இதயநோய் பாதிப்புகள் வந்துள்ளதாகவும் முறையிட்டுள்ளார்கள். ஆகவே எங்களுக்கு நஷ்ட ஈடு வேண்டும் எனப் பலரும் சேர்ந்து வழக்குப் போட்டுள்ளார்கள்.

பாதிப்புகள் வருவது உண்மையா?:

இத்தனை நாள்கள் covishield astrazeneca நிறுவனம் தற்காப்பான முறையைத்தான் இந்த வழக்கில் கையாண்டு வந்தது.

ஒரு கட்டத்திற்கு மேல் நஷ்ட ஈடு என்று அதிகம் பேர் கேட்கத் தொடங்கிய பிறகு, 'எல்லா தடுப்பூசிகளிலும் இந்த மாதிரியான சின்ன அளவிலான பக்கவிளைவுகள் ஏற்படவே செய்யும்.

அதைப் போன்று எங்கள் மருத்திலும் சின்ன அளவில் பக்க விளவு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அந்த பக்கவிளைவுகள் மிகமிக அரிதாக ஏற்படலாம் ' என்று பதிலளித்துள்ளார்கள்.

அந்த விஷயம் தான் இப்போது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது.

அந்தப் பக்கவிளைவை டிடிபி என்று சொல்கிறார்கள். அதாவது Thrombotic thrombocytopenic purpura என்று அதற்கு விரிவாவன விளக்கம். இதைப் பாமர மக்கள் புரிந்து கொள்ளும்படி சொன்னால், ரத்தக்கட்டு ஏற்படலாம்.

ரத்த அணுக்களில் உள்ள வெள்ளை அணுக்கள் அல்லது சிவப்பணுக்கள் எண்ணிக்கை குறையலாம். அந்தப் பக்கவிளைவைத்தான் த்ரோம்போடிக் த்ரோம்போசைட்டோபெனிக் பர்புரா என்று சொல்லி இருக்கிறது கோவிஷீல்டு நிறுவனம்.

அப்படிப் பார்த்தால் இந்தப் பக்கவிளைவால் ஒரு பக்கம் ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறையும், அதேபோல் ரத்த அணுக்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து ரத்தக்கட்டு ஏற்படும். அதாவது உறைந்துபோகக் கூடும்.

இதில், மக்கள் கவனிக்க வேண்டியது என்னவென்று பார்த்தால் இந்த மாதிரியான பக்கவிளைவு ஏற்படுவது மிகமிக அரிதாக நடக்கும் செயல்தான். அனைவருக்கும் ஏற்படாது.

covishield side effects Dr Sabari provides complete data

பாதிப்பு ஏற்படும் சதவீதம் எவ்வளவு:

சரியாகச் சொன்னால் .002 என்ற அளவில்தான் பாதிப்பின் அளவு உள்ளது. அதாவது ஒரு லட்சம் பேர் ஊசி போட்டிருந்தால், அதில் ஒருவருக்கு இந்தப் பாதிப்பு வரலாம். அது கூட இந்தியாவில் இல்லை. வெளிநாட்டினருக்குத்தான்.

இது எவ்வளவு குறைவான பாதிப்பு என்பதை நாம் வேறு சில உபாதைகளுடன் இதை ஒப்பிட்டுப் பார்த்தால்தான் புரிந்துகொள்ள முடியும். புத்தகத்தைப்பிடிப்பதால் 5% பேருக்கு ஹார்ட் அடாக் வருகிறது. கருத்தரிப்பு மருந்துகளை உட்கொள்பவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு என்பது 1 முதல் 4% ஆக உள்ளது.

இவை இல்லாமல் கொரானா வந்துவிட்டுச் சென்றாலே, ஒருவருக்கு ரத்தக்கட்டு வரலாம். அந்தப் பாதிப்பின் அளவி 10%. இவை அனைத்துடன் ஒப்பிடும்போது தடுப்பூசி போட்டதால் ஏற்படும் பக்க விளைவு என்பது 1% கூட இல்லை. .002 தான் உள்ளது.

அதைப் புரியாமல் பலரும் சமூக வலைத்தளங்களில் கோவிஷீல்டை வறுத்தெடுத்து வருகிறார்கள். மீம்ஸ் போட்டு விமர்சிக்கிறார்கள்.

தடுப்பூசி போட்டதால் கிடைத்த தன்மை:

இந்த இடத்தில்தான் ஒருவர் Risk-benefit ratio என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒருவர் இந்தத்தடுப்பூசியைப் போடுவதால் ஏற்படும் விளைவு என்ன? கிடைக்கக் கூடிய நன்மைகள் என்ன? போடாமல் விடுவதால் ஏற்படும் விளைவு என்ன? நன்மைகள் என்ன? இதைக் கொண்டுதான் நாம் ஒன்றை அறிவியல் ரீதியாகப் புரிந்து கொள்ள முடியும்.

அப்படிப் பார்த்தால் தடுப்பூசி போட்டுக் கொண்டதன் மூலம் வந்த நன்மை என்பது அதிகம். விளைவு என்பது மிகமிக குறைவு. போடாமல் விடுவதன் மூலம் ஏற்பட்டுள்ள தீமைகள் அதிகம். நன்மைகள் மிகவும் குறைவு.

ஆல்ஃபா, பீடா, டெல்டா என்று பல வகைகளில் கொரானா வைரஸ் உருமாறியது.

கொரோனா 2வது அலையின் போது மருத்துவமனைகளில் படுக்கையே கிடைக்கவில்லை. எல்லா ஆம்புலன்சுகளும் வரிசையில் சாலையில் காத்துக் கொண்டிருந்தன. அந்த அலை முடிந்ததும் ஒமிக்ரான் என்று ஒரு அலை வந்தது. டெல்டா அலைக்கும் ஒமிக்ரான் அலைக்கும் 2 மாதங்கள்தான் இடைவெளி.

ஒமிக்ரான் பற்றி மருத்துவ ஆராய்ச்சி என்ன சொன்னது என்றால், 10 மடங்கு அசுரன் இது என்று சொன்னார்கள். பாதிக்கப்படுவார்களின் எண்ணிக்கை பல மடங்கு உயரும் என்றார்கள். ஆனால், அந்தக் கணிப்பு தவறானது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவே இல்லை.

உயிரைக் காப்பாற்றிய ஹீரோ:

இந்த டெல்டாவுக்கும் ஒமிக்ரானுக்கும் நடுவில் என்ன நடந்தது? இதற்கு இடையில் ஒரே ஒரு ஹீரோதான் இருந்தார். அவர் யார்? அதுதான் தடுப்பூசி. டெல்டா அலைக்குப் பிறகு அதிகப்படியான மக்களுக்கு முதல் தடுப்பூசி போட்டுவிட்டோம். அதைப் போட்டதால்தான் ஒமிக்ரான் 10 மடங்கு வீரியமாக வரும்போது பாதிக்கப்படு மக்களின் எண்ணிக்கை கூடவே இல்லை.

அப்படி என்றால் ஏகப்பட்ட இறப்புகளை இந்தத் தடுப்பூசிதான் காப்பாற்றியுள்ளது. தடுத்துள்ளது. ஆகவே மக்கள் யாரும் தேவை இல்லாமல் பீதி அடைய வேண்டாம். இந்தப் பாதிப்பு என்பது இந்தியர்களுக்கானது இல்லை. வெளிநாட்டவர்களுக்குத்தான் என்று தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது" என்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+