முத்தரசன் கைதாகிறாரா.. "அழுக்கு" பிள்ளையார்.. "வாய்க்கொழுப்பு" பாஜக.. போலீசுக்கு ஓடிய ஹிந்து முன்னணி
முத்தரசனை கைது செய்ய வேண்டும் என்று பாரத் இந்து முன்னணி புகார் தந்துள்ளது
சென்னை: கொஞ்சம்கூட தாமதிக்காமல் வாய்க்கொழுப்பெடுத்த, அநாகரீக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் முத்தரசன் என்ற சமூக விரோதியை கைது செய்ய வேண்டும் என்று பாஜக ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்த நிலையில், பாரத் இந்து முன்னணியும் முத்தரசன் மீது போலீசில் புகார் தந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது... இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.
ஆனால், தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து சொல்லவில்லை.. இது ஒரு பிரச்சனையாக வெடித்தது.. குறிப்பாக பாஜக தலைவர்கள் இதை பற்றி கேள்வி எழுப்பினார்கள்.

வானதி
ஒரு மாநில முதல்வராக, ஸ்டாலின் இந்துக்களுக்கு வாழ்த்து சொல்லியிருக்க வேண்டும், எந்த இந்து பண்டிகை வந்தாலும் அவர் இப்படித்தான் செய்கிறார், வாழ்த்துக்களை சொல்வது கிடையாது என்று பாஜகவின் வானதி சீனிவாசன் குற்றஞ்சாட்டியிருந்தார்.. அதேபோல, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும், ஸ்டாலின் மீதான விமர்சனத்தை முன்வைத்திருந்தார்.. இதில் ஒருபடி மேலே சென்ற எச்.ராஜா, மேடை போட்டு ஸ்டாலினை விமர்சித்தார்.

ஜெகத் கஸ்பர்
"விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாத நபர், அடுத்த முதல்வராக வரக்கூடாது... வர விடமாட்டோம் என்று உறுதி மொழி எடுத்துகொள்வோம்... விநாயகர் சதுர்த்திக்கு கூடினோம் கலைந்தோம் என்றில்லாமல், வீடுவீடாக சென்று விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாத நபர் இன்னொரு முறை வந்து விடக்கூடாது என்று சொல்ல வேண்டும்.. இது பேரியக்கமாக உருவாக வேண்டும். இந்த அரசாங்கம் மூளை கெட்டுப்போய் திரிய கூடாது.. அந்த கிறித்துவ பாதிரியார் ஜெகத் கஸ்பரை கைது செய்ய வேண்டும்.,. NGOக்கள் அனைத்தும் கலெக்சனுக்காக செயல்படுகின்றன.. வெடிமருந்து குன்றின் மீது தமிழ்மக்கள் அமர்ந்துள்ளனர். ஏனென்றால் இங்கு திராவிட மாடல் உள்ளது" என்று கூறியிருந்தார்.

பார்வதி
இப்படி பாஜகவினர் திமுக அரசை குறைகூறி வரும் நிலையில், திமுக சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பாரிமுனையில் நடைபெற்றது... இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் பேசினார்.. அப்போது, "அமைச்சர் சேகர்பாபு கடவுள் நம்பிக்கை உடையவர்.. எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாதவன்.. ஆனால் எங்களுக்குள் நட்பு உள்ளது.. கணேசனின் தாயாரான பார்வதியம்மாள் பல மாதங்களாக, பல வருடங்களாக குளிக்கவில்லை. இப்படிப்பட்ட சூழலில் ஒருநாள் கங்கைக்கு குளிக்க போயிருக்கிறார்... குளிக்கும்போது ஏராளமான அழுக்கு வந்திருக்கிறது.

அழுக்கு - விநாயகர்
அந்த அழுக்கை உருட்டி வைத்திருக்கிறார். அதுதான் விநாயகராகி விட்டது.. குளித்து முடித்த பிறகு அந்த அழுக்கை தண்ணீரில் கரைத்து விட்டிருக்கிறார்... இப்படித்தான் வரலாற்றில் கூறுகிறது.. அதனால், அந்த அழுக்கை போய் நாங்கள் ஏன் கும்பிட வேண்டும்? அந்த அழுக்குக்கு எதற்காக நாங்கள் வாழ்த்து சொல்ல வேண்டும்" என்று முத்தரசன் பேசியிருந்தார். இந்த கருத்திற்கும் பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக, பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி கொந்தளித்து ஒரு ட்வீட் பதிவிட்டிருந்தார்.

வாய்க்கொழுப்பு
அதில், "விநாயகரை இழிவுபடுத்தி பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் முத்தரசன் கைது செய்யப்பட வேண்டும். மத துவேஷங்களை செய்வோர் மீது நடவடிக்கை எடுப்பதாக சொன்ன தமிழக முதலமைச்சர், திராவிட முன்னேற்ற கழக அரசு மதசார்பற்றது என்பது உண்மையென்றால், தாமதிக்காமல் தலைவர் என்ற போர்வையில் இருக்கும் வாய்க்கொழுப்பெடுத்த, அநாகரீக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் முத்தரசன் என்ற சமூக விரோதியை தமிழக காவல்துறை உடனடியாக கைது செய்ய உத்தரவிட வேண்டும்" என்று பதிவிட்டிருந்தார்.

ஹிந்து முன்னணி
இந்நிலையில், முத்தரசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை பாரிமுனையை சேர்ந்தவர் டில்லிபாபு... பாரத் ஹிந்து முன்னணி மாநில செயலரான இவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தந்துள்ளார்.. அதில், "சென்னையில் அரசு கல்லுாரி ஒன்றில், திமுக நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது... இதில், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன், விநாயகர் மற்றும் பார்வதி குறித்து அவதுாறாக பேசியுள்ளார். இது, ஹிந்துக்களின் மனதை புண்படுத்தும் விதமாக உள்ளது. முத்தரசன் மீது, சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications