Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆசை எடப்பாடிக்கு.. ஜெயலலிதாவே "அதை" ஏற்கலையே.. "ஆளுநரை திரும்ப பெற வேண்டாம்".. முத்தரசன் ஒரே போடு

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆளுநரை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டாம் மாறாக ஆளுநர் பதவியை முற்றிலுமாக முறியடிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன் தெரிவித்துள்ளார்.. ஒரே நாடு ஒரே தேர்தலை அதிமுக ஆதரிப்பதில் ஆச்சரியம் இல்லை, 2024-ம் ஆண்டு சட்டசபையோடு சேர்ந்து தேர்தல் வந்தால் ஆட்சிக்கு வந்து விடலாம் என்று குறுகிய ஆசையை அதிமுக கொண்டுள்ளது என்றும் மூத்த தலைவர் முத்தரசன் விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்றம் மற்றும் மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில் "ஒரே நாடு ஒரே தேர்தல்" திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. அதுவும், வரும் எம்பி தேர்தலிலேயே இந்த திட்டத்தை அமல்படுத்தலாமா? என்றும் மத்திய அரசு தீவிரமாக முயற்சி எடுத்து வருகிறது.

இந்த திட்டத்துக்கு தமிழகத்தில் எதிர்க்கட்சியான அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது... காரணம், "ஒரே நாடு ஒரே தேர்தல்" அரசின் செலவை குறைக்கும் என்று அதிமுக தரப்பில் சொல்லப்படுகிறது.

 அதிபர் ஆட்சி

அதிபர் ஆட்சி

ஆனால், இந்த திட்டத்துக்கு ஆரம்பத்தில் இருந்தே பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.. அதில் திமுகவும் ஒன்று.. இந்த திட்டத்துக்காக அரசைக் கலைத்தால், தேர்தலுக்காக செலவிடப்பட்ட மக்களின் வரிப்பணம் வீணாகும் என்பதால், இந்த திட்டம் நடைமுறைக்கு ஒத்துவராத திட்டம்.. அதனால், இதை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.. அதேபோல, இன்றைய முரசொலி தலையங்கத்திலும் இதற்கான எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. எடப்பாடி பழனிசாமியை விமர்சித்துள்ளதுடன், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்தும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

 ஒரே ஒரே ஒரே

ஒரே ஒரே ஒரே

அதில், "பாஜகவுக்குத் தெரிந்த ஒரே வார்த்தை 'ஒரே'தான்! எதற்கெடுத்தாலும் 'ஒரே சேர்த்துவிட்டால் தேசம் முழுக்க ஒன்றாக ஆக்கிவிட்டதாக அவர்களுக்கே ஒரு நினைப்பு! பா.ஜ.க.வுக்கு தெரிந்த பாதை என்பது கொல்லைப்புற வழியாகும். சட்டமன்றங்களில் தான் வெற்றி பெற முடியவில்லை என்றால் ஆளும் கட்சி உறுப்பினர்களை இழுத்து, ஆட்சியைக் கலைப்பது அதற்கு தெரிந்த வழியாகும். அப்படி கவிழ்க்கப்பட்ட ஆட்சிக்கு எப்போது தேர்தல் நடத்துவீர்கள்?

 கணக்கு பரீட்சை

கணக்கு பரீட்சை

ஐந்து ஆண்டுகள் கழித்து. நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்தா? அதுவரை அந்த மாநிலத்தை ஆளப் போவது யார்? அந்த மாநிலத்துக்குத் தேர்தல் நடத்துவதற்காக, ஒருவேளை நாடாளுமன்றத்தையே கலைத்து விடுவார்களா? அப்போது ஆகும் செலவை. பா.ஜ.க.வின் பல்லாயிரம் கோடி கட்சி நிதியில் இருந்து கொடுப்பார்களா? தேசியப் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் தருவது நாடாளுமன்றத் தேர்தல். மாநில நலன்களை கவனத்தில் கொள்ள வேண்டியது சட்டமன்றத் தேர்தல். இரண்டையும் குழப்பிக் கொள்ள முடியாது. எல்லாம் தேர்வு தானே என்று அறிவியல் தேர்வையும். கணக்கையும் ஒரே நேரத்தில் எழுதச் சொல்ல முடியுமா? என்றெல்லாம் முரசொலி கேள்வி கேட்டுள்ளது.

 ஜீவானந்தம்

ஜீவானந்தம்

அதேபோல, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இரா.முத்தரசனும் "ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது அதிபர் ஆட்சியை மறைமுகமாகக் கொண்டு வருவதுபோல் அமையும் என்று ஏற்கனவே விமர்சித்திருந்தார்.. இந்நிலையில், செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி தந்துள்ளார்.. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த மூத்த தலைவர் பா. ஜீவானந்தம் 60 -ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை, காசிமேட்டில் உள்ள நினைவிடத்தில் மூத்த தலைவர் நல்லகண்ணு மற்றும் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் முத்தரசன் சொன்னதாவது:

பரப்புவாதம்

பரப்புவாதம்

நாட்டில் பரப்புவாதம் தலை தூக்கி நிற்கிறது நாட்டையே தலைகீழாக திருப்ப முயற்சி நடந்து கொண்டிருக்கிறது, ஒரே நாடு ஒரே தேர்தல் என்று மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால் நாட்டு மக்களை பிளவுபடுத்தி தங்களது சுயநலக் கொள்கையை பயன்படுத்தி மக்களை பிரிக்க நினைக்கின்றனர். ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் இந்தியாவில் அதிபர் ஆட்சியை கொண்டு வர பாஜக முயலுகிறது. ஒரே நாடு ஒரே தேர்தலை அதிமுக ஆதரிப்பதில் ஆச்சரியம் இல்லை... 2024-ம் ஆண்டு சட்டசபையோடு சேர்ந்து தேர்தல் வந்தால் ஆட்சிக்கு வந்து விடலாம் என்று குறுகிய ஆசையை அதிமுக எடப்பாடி பழனிசாமி வைத்துள்ளார்.

 கொஞ்சம் கொஞ்சமா

கொஞ்சம் கொஞ்சமா

ஜெயலலிதா கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தபோது இதை ஏற்கவில்லை. இதை யாராலும் ஏற்றுக்கொள்ளவும் முடியாது. அதிமுக கொள்கைக்கு இது எதிரானது.. ஒரு கட்சி ஆட்சியாக இருக்க வேண்டும் என்பது ஆர்எஸ்எஸ் கொள்கை.. அதை கொஞ்சம் கொஞ்சமாக பிஜேபி செய்து வருகிறது. மதவாதத்திற்கும் தமிழ்நாடு என்ற பெயருக்கும் தமிழர்களுக்கும் எதிராக ஆளுநர் செயல்பட்டு வருகிறார். ஆளுநரை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டாம். ஆளுநர் பதவியை முற்றிலுமாக முறியடிக்க வேண்டும்.

 நல்லக்கண்ணு

நல்லக்கண்ணு

மேலும் ஒரு ஒப்புக்காக ஒரே நாடு ஒரே தேர்தலை ஏற்றுக் கொள்வதாக வைத்திருந்தாலும் 2024 -ம் ஆண்டு வெற்றி பெற்றால் ஐந்து ஆண்டுகள் நீடிக்கும் என்பதற்கு என்ன சாட்சி? ஒன்றிய அரசை கலைத்து விட்டு திரும்பத் திரும்பத் தேர்தல் நடத்த, நமது நாடு தயாராக இருக்கும்" என்றும் முத்தரசன் கூறியுள்ளார்.. முன்னதாக, மூத்த தலைவர் நல்லகண்ணு, மறைந்த பா. ஜீவானந்தத்தின் பெருமைகளை எடுத்துரைத்தார்... அதேபோல, முத்தரசன் பேசும்போது, "இலக்கிய பேராசிரியர் ஜீவானந்தம், மிகப்பெரிய புரட்சியாளராகவும் நாட்டின் விடுதலைக்காக போராடினார். அதற்காக பல ஆண்டுகள் சிறை தண்டனைகளை அனுபவித்தார்.. தந்தை பெரியாருடைய நினைவு பகுத்தறிவு பிரச்சாரத்தையும் செய்தார்.

கலைஞர்

கலைஞர்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியை தமிழ்நாட்டில் தொடங்குவதற்கு இவரும் ஒரு முக்கிய புள்ளியாக இருந்தவர். இலக்கியத்தில் தனக்கு நிகர் யாரும் இல்லை என்ற இருந்தவர், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கலைஞர்களோடும் கருணாநிதி, எம்ஜிஆர் அவர்களுடன் நட்போடு இருந்தவர், ராஜாஜி, பெரியார், அண்ணா, கருணாநதி என அனைத்து தலைவர்களுடனும் பணியாற்றியவர், தனது வாழ்க்கை முழுவதும் நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் பணியாற்றினார் என்று புகழாராம் சூட்டினார் முத்தரசன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+