திமுக எங்களுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கியதில் திருப்தி இல்லை.. இருந்தாலும்! சிபிஎம் சண்முகம் பேட்டி!
சென்னை: திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 5 தொகுதிகளை ஒதுக்கியதில் எங்களுக்கு திருப்தி இல்லை என சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். ஆனால், கூட்டணி ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்க கூடாது என்பதால் 5 தொகுதிகளை ஏற்றுக்கொண்டோம். தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவில்லாமல் செல்வது தேர்தல் பணிகளை பாதிக்கும் என அவர் கூறினார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் தான் இருக்கிறது. அடுத்த மாதம் இதே தேதியில் தேர்தல் நடந்து முடிந்து இருக்கும். தேர்தலுக்கு நாட்கள் குறைவாக உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் போட்டிப் போட்டு பணிகளை செய்து வருகிறார்கள்.

திமுக சிபிஎம் கூட்டணி
தற்போது தமிழகத்தில் 4 முனை போட்டி நிலவுகிறது. இதில் ஆளும் திமுக கூட்டணி கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் மேலும் மெகா கூட்டணியை அமைத்து பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்படுகிறது. திமுக கூட்டணியில் இந்த முறை 24 கட்சிகள் உள்ளன. இதனால் இந்த கட்சியில் கூட்டணிகளுக்கு சீட்கள் ஒதுக்குவதில் உடன்பாடு ஏற்படாமல் இழுபறி நீடித்து வருகிறது.
5 தொகுதிகள் ஒதுக்கியதில் திருப்தி இல்லை
இந்த நிலையில் தான் நீண்ட இழுபறிக்கு பிறகு திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே இன்று மாலை தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 6 தொகுதிகள் வேண்டும் என கூறி வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 5 தொகுதிகளுக்கு சரி என சம்மதம் தெரிவித்துவிட்டது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் பெ சண்முகம் தலைமையில் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சிபிஎம் மாநில செயலாளர் பெ சண்முகம், திமுக எங்களுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கியதில் திருப்தி இல்லை என்றும், மதசார்ப்பற்ற முற்போக்கு கூட்டணி ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கக் கூடாது என்பதற்காகவே 5 தொகுதிகளை ஏற்றுக்கொண்டோம் எனவும் கூறினார்.
ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கக் கூடாது
அவர் கூறியதாவது:- கூட்டணியில் அதிக கட்சிகள் இருப்பதால் நீங்கள் கேட்கும் தொகுதிகளை கொடுக்க முடியவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டதன் காரணமாக 5 தொகுதிகளை ஒதுக்கியதற்கு நாங்கள் சம்மதம் தெரிவித்தோம். நாங்கள் எடுத்த முடிவு, மதசார்ப்பற்ற முற்போக்கு கூட்டணி ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கக் கூடாது என்பதற்காக தான்..
இதனாலேயே மாநில செயற்குழு கூட்டத்தில் 5 தொகுதிகளை பெறுவதற்கு ஒப்புதல் தரப்பட்டது. 5 தொகுதிகள் என்ற எண்ணிக்கையில் எங்களுக்கு திருப்தி இல்லை. அதே நேரத்தில் கூட்டணி ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்க கூடாது என்பதால் 5 தொகுதிகளை ஏற்றுக்கொண்டோம். தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவில்லாமல் செல்வது தேர்தல் பணிகளை பாதிக்கும். எங்கள் கூட்டணி வரும் தேர்தலில் அபார வெற்றி பெறும்.
சென்னையில் ஒரு தொகுதி வேண்டும்
6 என்ற தொகுதிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்ற முடிவில் நாங்கள் உறுதியாகவே இருந்தோம். ஆனால் ஸ்டாலின் அவர்களது தரப்பு விஷயங்களை கூறினார். இதையடுத்து இதற்கு நாங்கள் சம்மதித்தோம். போட்டியிட விருப்பம் உள்ள தொகுதிகள் அடங்கிய லிஸ்டினை முதல்வர் ஸ்டாலினுடன் கொடுத்துள்ளோம். சென்னை மாநகரில் கட்டாயம் ஒரு தொகுதி வேண்டும் என்ற ரீதியிலேயே நாங்கள் இந்த விருப்ப பட்டியலை கொடுத்து இருக்கிறோம்.
இப்போது தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை மட்டுமே நடத்தப்பட்டது. எந்தெந்த தொகுதிகள் என்பது முடிவு செய்யப்படவில்லை. மற்ற கட்சிகளுடன் தொகுதி பங்கீடு நிறைவடைந்த பிறகு மீண்டும் அழைப்பதாக கூறினர். அப்போது எந்த தொகுதிகள் என்பது முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 28 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 5 தொகுதிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு 5 தொகுதிகள், மதிமுகவுக்கு 4 தொகுதிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இன்னும் தேமுதிக, விசிக உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செயப்படவில்லை.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications