”தனியார்போல் செயல்படும் அரசு உதவிபெறும் கல்லூரி” - கையகப்படுத்த அமைச்சருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்
சென்னை: துரைப்பாக்கம் டி.பி.ஜெயின் கல்லூரியில் அதீத கட்டண வசூல் முறைகேடு நடைபெறுவதாகவும் தனி அலுவலர் அமைத்து இக்கல்லூரியை அரசு கையகப்படுத்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், "சுயநிதிப் பாடப்பிரிவின் மூலம் லாபம் பெற ஆரம்பித்த டி.பி.ஜெயின் கல்லூரி நிர்வாகம், கடந்த சில ஆண்டுகளாக அரசு உதவிபெறும் பாடப்பிரிவையும் சுயநிதிப் பாடப்பிரிவாக மாற்றி அதீத கட்டண கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது.
கடந்த நான்காண்டுகளாக அரசு உதவி பெறும் பிரிவில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட பல மடங்கு உயர்த்தி சுயநிதிப்பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு இணையான கட்டணத்தை வசூலித்து வருகிறது.

பேராசிரியர்கள் பணி நீக்கம்
2020-21ஆம் ஆண்டு முதல் அரசு உதவி பெறும் பிரிவில் மாணவர் சேர்க்கையை முற்றிலுமாக நிறுத்தியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு உதவி பெறும் பிரிவில் பணி நிறைவு பெறும் பேராசிரியர்களின் இடத்தில் புதிய ஆசிரியர்களை நியமிப்பதை நிறுத்தியுள்ளது. இதுபோன்ற அரசின் விதிமுறைகளுக்கு புறம்பான கல்லூரி நிர்வாகத்தின் செயல்பாடுகளை கண்டித்த 11 பேராசிரியர்களை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சட்ட விரோதமாக பணி நீக்கம் செய்துள்ளது.

அரசு உதவிபெறும் கல்லூரி
அரசின் அனைத்து உதவிகளையும் பெற்று கல்வி நிறுவனத்தை தொடங்கி உள் கட்டமைப்பு வசதிகளை பெருக்கிக் கொண்டு அதை அப்படியே சுயநிதி கல்லூரியாகவே மாற்றி செயல்படுத்தி வருகிறது. அதீத கட்டண கொள்ளை வசூலில் ஈடுபடுவதால் அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளில் அப்பகுதியில் வசிக்கும் ஏழை, எளிய மாணவர்கள் சேரமுடியாமல் உயர்கல்வி பயில முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அரசு கையகப்படுத்த வேண்டும்
எனவே, தாங்கள் இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு, சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வரும் டி.பி. ஜெயின் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் (ஒழுங்குமுறை) சட்டம், 1976 பிரிவு 14 (அ)வை பயன்படுத்தி ஒரு தனி அலுவலரை நியமித்து அரசின் கட்டுப்பாட்டில் கையகப்படுத்தி தமிழக அரசே இக்கல்லூரியை ஏற்று நடத்திட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மேலும் இதுபோன்று தமிழகம் முழுவதும் இயங்கும் 250 அரசு உதவி பெறும் கல்லூரிகளும் அரசின் விதிகளுக்குட்பட்டு செயல்படுகின்றனவா, அரசு நிர்ணயித்த கட்டணங்கள் தான் வசூலிக்கப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்கும் உரிய நடவடிக்கைள் மேற்கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்." என அவர் குறிப்பிட்டு உள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications