கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசல்.. சுற்றுலா பயணிகள் ஷாக்! திறந்து 9 மாதங்களில் நடந்த சம்பவம்
குமரி: கன்னியாகுமரியில் (Kanyakumari) விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் வகையில் கடலுக்குள் கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 10 மீட்டர் அகலத்தில் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்ணாடி பாலத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டு இருப்பது சுற்றுலா பயணிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. விரிசல் ஏற்பட்ட கண்ணாடி பாலத்தை சீர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இந்தியா மட்டும் இன்றி உலக அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக கன்னியாகுமரி உள்ளது. நாட்டின் தென்கோடி பகுதியாக உள்ள கன்னியாகுமரியில் சூரிய உதயத்தை பார்க்கவும், இங்குள்ள விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை உள்ளிட்டவற்றை பார்க்கவும் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம்.

விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை
அதிலும் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். தமிழகம் மட்டும் இன்றி அண்டை மாநிலமான கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் தினமும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வந்து செல்கிறார்கள். ஓணம் பண்டிகை தொடர்விடுமுறை என்பதால், கடந்த 3 நாட்களாக கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அதிலும் நேற்று சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர்.
திரும்பும் இடமெல்லாம் சுற்றுலா பயணிகள் கூட்டமாகவே இருந்தது. அதிகாலையில் கடற்கரை பகுதிக்கு வந்த சுற்றுலா பயணிகள் சூரியன் உதயமான காட்சியை பார்த்து ரசித்தனர். மேலும், முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மறக்காமல் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை காண செல்வது வழக்கம்.
கண்ணாடி பாலத்தில் விரிசல்
கன்னியாகுமரியில் இன்றும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதிய நிலையில், விவேகானந்த மண்டபத்தை பார்வையிட சுற்றுலா பயணிகள் திரண்டனர். விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து திருவள்ளுவர் சிலைக்கு செல்ல கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்ணாடி பாலத்தில் நடந்து செல்வது மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவமாக இருக்கும் என்பதால் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் அங்கு சென்று வருவதை பார்க்க முடியும்.
இந்த நிலையில், இன்று கண்ணாடி பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விரிசல் ஏற்பட்ட இடத்திற்கு செல்ல முடியாதபடி தடுப்புகள் அமைக்கப்பட்டன. பாலத்தின் பக்கவாட்டு பகுதி வழியாக செல்ல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். ஆர்வ மிகுதியில் சில சுற்றுலா பயணிகள் விரிசல் ஏற்பட்ட பகுதி அருகே நின்று செல்ஃபி எடுப்பதையும் காண முடிந்தது. விரிசல் ஏற்பட்ட கண்ணாடி பாலத்தை சீர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
9 மாதத்திலேயே விரிசல்
இந்த கண்ணாடி பாலம் கடந்த டிசம்பர் மாதம் திறந்து வைக்கப்பட்டது. கண்ணாடி பாலம் திறந்து 9 மாதங்களே ஆகியுள்ள நிலையில், விரிசல் ஏற்பட்டிருப்பது சுற்றுலா பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கண்ணாடி பாலத்தில் பராமரிப்பு பணிகள், அதாவது வண்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், அப்போது பராமரிப்பு உபகரணங்கள் கண்ணாடி பாலத்தில் விழுந்ததால் லேசான விரிசல் ஏற்பட்டிருப்பதாகவும், அதனால் தற்காலிகமாக சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை என்றும், விரிசல் ஏற்பட்ட கண்ணாடியை சீர் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் சீர்செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications