கிரெடிட் கார்டு பயன்படுத்தும் முன் இந்த 6 மறைமுக உண்மைகள் தெரியாமல் போனால் பண இழப்பு உறுதி
சென்னை: கிரெடிட் கார்டு என்பது இன்றைய காலத்தில் ஒரு கத்தி போன்றது.. சரியாகக் கையாண்டால் பலன், தவறினால் ஆபத்து.. பொதுவாக கிரெடிட் கார்டு பயன்படுத்தும்போது பல நுணுக்கமான விஷயங்களை ஒவ்வொரு பயனரும் தெரிந்துகொள்ள வேண்டும்.. குறிப்பாக வட்டி கணக்கிடப்படும் முறை மற்றும் சில மறைமுகக் கட்டணங்கள் பற்றி விழிப்புணர்வுடன் இருப்பது அவசியமாகும்.
வழக்கமாக 45 முதல் 50 நாட்கள் வட்டி இல்லா காலம், அதாவது Grace Period என்று சொல்லப்படும்.. ஆனால், இது நீங்கள் செலவு செய்யும் தேதியைப் பொறுத்தது.

மாதத்தின் முதல் தேதியன்று நீங்கள் செலவு செய்தால் 50 நாட்கள் கிடைக்கும், அதுவே பில் தேதியான 20-ஆம் தேதிக்கு முன் 19ம் தேதி செலவு செய்தால் உங்களுக்கு வெறும் 20 நாட்களுக்கும் குறைவான காலமே கிடைக்கும்.. இந்த தேதிகளை சரியாக திட்டமிடாதபோது தான் வட்டிச் சுமை அதிகமாகிறது..
கிரெடிட் கார்டு - கவனிக்க வேண்டியது
சில வங்கிகளில் பெட்ரோல் பங்குகளில் கார்டை பயன்படுத்தும்போது 'Surcharge' என்ற கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படலாம்.. சில கார்டுகள் இதைத் திரும்பத் தந்தாலும், அந்த திரும்ப தரும் தொகைக்கு 18% ஜிஎஸ்டி விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
அதேபோல, வெளிநாட்டு இணையதளங்களில் அல்லது வெளிநாடுகளில் கார்டைப் பயன்படுத்தும்போது 'Foreign Currency Markup Fee' என்ற பெயரில் 2 முதல் 3.5 சதவீதம் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படலாம்.. இது பில் தொகையை விடப் பெரிய பாரத்தை உண்டாக்கும்..
டூப்ளிகேட் கார்டு கட்டணம்
ஒரு சில கிரெடிட் கார்டுகளில் Credit Shield போன்ற காப்பீட்டுத் திட்டங்கள் தானாகவே இணைக்கப்பட்டிருக்கலாம்.. இதற்கு உங்கள் அனுமதியின்றி மாதந்தோறும் ஒரு சிறு தொகை பிடிக்கப்பட வாய்ப்புள்ளது.
அதேபோல் கார்டு தொலைந்துவிட்டால் வாங்கும் டூப்ளிகேட் கார்ட் கட்டணம், பில் பேமெண்ட் செய்யும்போது ஏற்படும் செக் பவுன்ஸ் கட்டணம் எனப் பல மறைமுகக் கட்டணங்கள் இருக்கலாம்.. உங்கள் பில்லைப் பார்க்கும்போது ஒவ்வொரு ரூபாயும் எதற்காக பிடிக்கப்பட்டுள்ளது என்பதைப் பார்ப்பது அவசியம்..
நிலுவைத்தொகை - கவனம்
ரிவார்டு பாயிண்ட்டுகள் என்பது ஒரு சலுகையாக வழங்கப்பட்டாலும், அவை குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு காலாவதி ஆகிவிடும்.. சில வங்கிகள் அந்தப் பாயிண்ட்டுகளைப் பொருட்களாக மாற்றும்போது 'Redemption Fee' என்ற பெயரில் 99 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கலாம்.. இதனால் நீங்கள் இலவசமாக கிடைக்கும் என்று நினைக்கும் பொருள், உண்மையில் ஒரு விலைக்கு வாங்கிய பொருளாகவே மாற வாய்ப்புள்ளது..
கார்டை பயன்படுத்துவது எளிது, ஆனால் அதை மூடுவது மிகவும் கஷ்டமானது.. நீங்கள் கார்டை மூட சொன்ன பிறகும், மிகச்சிறிய நிலுவைத்தொகை இருப்பதாக சொல்லி, அதை தொடர செய்ய வாய்ப்புள்ளது.. கார்டை முறைப்படி மூடிவிட்டு No Due Certificate வாங்காதவரை சிபில் ஸ்கோரில் அந்த கணக்கு திறந்தே இருக்கும்.. இது பின்னாளில் கடன்கள் வாங்கும்போது பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications