"அதை" வேற தலையில் மாட்டிக்கிட்டு.. பரிதாப பெண்.. "எண்ணெய் கிண்ணத்தை" பார்த்தாலே அலறி ஓடுவாராம் மாப்ள
சென்னை: குன்றத்தூர் அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு தர மறுத்ததால், புதுப்பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடிய கணவன், உடந்தையாக இருந்த மாமியாரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெண்கள் இன்று அனைத்து துறையிலும் தடைகளை முறித்துப்போட்டு, முன்னேறி வருகிறார்கள்.. தங்கள் சொந்த காலில் நிற்க ஆரம்பித்து விட்டார்கள்..
கல்வி, பொருளாதாரம் போன்ற விஷயங்களில், முன்பைவிட பெண்களின் நிலை பலமடங்கு மேம்பட்டிருக்கிறது... மறுப்பதற்கில்லை.. ஆனாலும், காலம் மாறினாலும், வரதட்சணைக் கொடுமை மட்டும் இன்னும் குறைந்ததாக தெரியவில்லை.

துணிச்சல்
அவ்வளவு ஏன்... பெண்கள் அதிக அளவு கல்வியறிவு பெற்ற, பக்கத்து மாநிலமான கேரளாவில்கூட, இந்த வரதட்சணை கொடுமை தாண்டவமானடியதையும், அதனால், அடுத்தடுத்த 3 இளம்பெண்கள் தற்கொலை செய்து கொண்டதையும் கண்டு, இந்த நாடே அதிர்ந்தது.. நம்ம ஊரும் இதற்கெல்லாம் விதிவிலக்கு இல்லை.. வரதட்சணையின் அளவுகளும், வடிவங்களும்தான் மாறி உள்ளதே தவிர, வரதட்சணையின் தீவிரம் இன்னமும் அப்படியேதான் இருக்கிறது.. ஒருசில துணிச்சலான பெண்கள் சட்டரீதியாக அணுகி இதற்கு தீர்வு கண்டுகொள்கிறார்கள் என்றாலும், பல பெண்களின் உயிர்கள் நான்கு சுவற்றுக்குள்ளேயே துடிதுடித்து நின்றுவிடுகின்றன.

மாப்ளை
அப்படித்தான் சென்னையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. குன்றத்தூர் அடுத் சோமங்கலம் அருகே அமரம்பேடு என்ற கிராமம் உள்ளது.. இங்கு வசித்து வருபவர் கோகுலகண்ணன்.. 32 வயதாகிறது.. இவரது, மனைவி பெயர் லோகப்பிரியா.. 26 வயதாகிறது... இவர்களுக்கு கல்யாணம் ஆகி 8 மாதம்தான் ஆகிறது.. மாப்பிள்ளை கோகுலகண்ணன் ஐடி நிறுவனத்தில் வேலை பார்ப்பதால், லோகப்ரியாவின் பெற்றோர் 30 சவரன் நகை, கோகுலகண்ணனுக்கு 6 சவரன் நகை மற்றும் கார் வாங்க ரூ.1 லட்சம் ரொக்க பணம் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் போன்றவற்றை வரதட்சணையாக தந்துள்ளனர்..

வரதட்சணை
ஆனால், கல்யாணத்துக்கு பிறகு, கோகுலகண்ணன் வேலைக்கே போகவில்லையாம். நாளெல்லாம் ஊர் சுற்றி வந்துள்ளார்... இதற்கு, கோகுலகண்ணனின் அம்மா ராஜேஸ்வரியும் உடந்தையாக இருந்து வந்துள்ளார். கல்யாணம் ஆகி ஒருசில மாதங்கள்தான் இவர்கள் மகிழ்ச்சியாக இருந்துள்ளனர்.. அதற்குள் வரதட்சணை பிரச்சனையை கிளப்பி உள்ளார் கோகுலகண்ணன்.. கடந்த சில மாதங்களாகவே, 10 சவரன் நகையை வாங்கி வரும்படி கோகுலகண்ணனும், ராஜேஸ்வரியும் லோகப்ரியாவை கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்... இந்த விஷயத்தை லோகப்ரியா தன்னுடைய பெற்றோரிடம் சொல்லவும், மாமியார் குடும்பத்தை அனுசரித்து செல்லும்படி அறிவுறுத்தி வந்திருக்கிறார்கள்.

சாவில் மர்மம்
இந்நிலையில், கடந்த 27ம் தேதி லோகப்பிரியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சோமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை அறிந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்து, அலறி துடித்து ஓடினார்கள்.. தங்கள் மகளின் சாவில் மர்மம் இருப்பதாகவும், கூடுதல் வரதட்சணை கேட்டு கணவனும், மாமியாரும் சேர்ந்து மகளை கொலை செய்திருக்கலாம் என்றும் சோமங்கலம் போலீசில் புகார் தந்தனர்.. போலீசாரும் வழக்குப்பதிவு விசாரணையை துவக்கினர்.. அப்போதுதான், லோகப்பிரியா தற்கொலை செய்து கொள்ளவில்லை, கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பது போலீசார் விசாரணையில் உறுதியானது.

வழுக்கை தலை
அதுமட்டுமல்ல, ஐடி கம்பெனியில் கோகுல கண்ணன் வேலை பார்க்கவேயில்லையாம்.. பொய் சொல்லி திருமணம் செய்துள்ளார்.. அதாவது, கோகுலகண்ணனுக்கு தலையில் வழுக்கை இருந்திருக்கிறது.. இவருக்கு வீட்டில் பெண் பார்க்க தொடங்கியதுமே, இவரது தலையை பார்த்து பலரும் பெண் கொடுக்க முன்வரவில்லையாம்.. தன்னுடைய சொட்டை தலைக்கு அழகான பெண் கிடைக்காது என்று முடிவுசெய்த கோகுலகண்ணன், ஐடி நிறுவனத்தில் வேலை செய்வதாக காட்டிக்கொண்டு, வரதட்சணையாக நகை, ரொக்கப்பணம் அதிகம் வாங்க வேண்டும் என்று பிளான் செய்தாராம்..

எண்ணெய் கிண்ணம்
இதற்காக முதலில் தன்னுடைய தலைக்கு ஆயிரக்கணக்கில் செலவு செய்து "விக்" வாங்கியுள்ளார்... அந்த விக்கை தலையில் மாட்டிக் கொண்டு போய்தான், பெண் பார்த்துள்ளார்.. அப்போதுகூட, தனக்கு வழுக்கை என்று உண்மையை சொல்லவில்லையாம்.. விக் வைத்தபடியே, லோகப்பிரியவுடன் திருமணமும் நடந்து முடிந்துள்ளது... கோகுலகண்ணனுக்கு கல்யாணம் முடிந்த அடுத்த சில தினங்களுக்கு பிறகு, தலையில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது... அப்போது லோகப்பிரியா, கணவருக்கு எண்ணெய் தேய்க்க வந்தாராம்..

எண்ணை கிண்ணம்
அந்த எண்ணெய் கிண்ணத்தை பார்த்ததுமே கோகுலகண்ணன் பதறிப்போய் மறுத்து அங்கிருந்து நழுவிவிட்டாராம்.. அப்போதுகூட, கோகுலகண்ணன் வெட்கப்படுவதாக லோகப்பிரியாவும், அவரின் குடும்பத்தினரும் நினைத்தார்களாம்.. பலநாள் திருடன் ஒருநாள் அகப்பட்டுதானே ஆகணும்? கோகுலகண்ணனின் வழுக்கைத் தலையை ஒருநாள் லோகப்பிரியா பார்த்துவிட்டார்... அந்த நிமிடம் அதிர்ந்து போனாராம்.. உண்மையை சொல்லியிருக்கலாமே? ஏன் மறைத்துவிட்டீர்கள்? என்று என்று கோகுலகண்ணனிடம் கேட்டிருக்கிறார்.

விக் விக்
அதற்கு கோகுலகண்ணன், "நீங்க மட்டும் என்னவாம், வாக்குறுதி தந்தபடி, வரதட்சணையாக நகைகளை தராமல் என்னை ஏமாத்திட்டீங்களே" என்று சொல்லி சண்டை போட்டிருக்கிறார்... அப்போதுதான், கோகுலகண்ணன் ஐடி நிறுவனத்தில் வேலை பார்ப்பதாக சொன்னதும் உண்மையில்லை என்று தெரியவந்திருக்கிறது. தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பதை நினைத்து, கதறி அழுதுள்ளார் லோகப்பிரியா.. இதை பற்றி கேட்கும்போதெல்லாம், வரதட்சணை பற்றி பேசி, லோகப்பிரியாவை தாக்கியிருக்கிறார்... சம்பவத்தன்று கடுமையாக தாக்கியிருக்கிறார்.. அத்துடன், லோகப்பிரியாவின் கழுத்தை நெரித்துள்ளார்.. இதில், அந்த இடத்திலேயே லோகப்பிரியா உயிரிழந்துவிட்டார்..

சடலம்
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கோகுலகண்ணன், தன் அம்மாவை கூப்பிட்டு விஷயத்தை சொன்னாராம்.. அதற்கு பிறகு இருவரும் சேர்ந்து, கொலையை மறைத்து, தற்கொலையாக காட்டிக் கொள்ள, லோகப்பிரியா சடலத்தை, தூக்கில் தொங்க விட்டிருக்கிறார்கள்.. இவ்வளவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.. இந்த விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே, போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டும் வந்துவிட்டது.. பெண்ணை கொடூரமாக அடித்துகொன்றது ரிப்போர்ட்டிலும் உறுதியாகிவிட்டது.. இப்போது, தாயும், மகனும் ஜெயிலில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications