Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பயிர்க்கடனில் சூப்பர் சர்ப்ரைஸ்! நபார்டு வங்கியின் தாராளம்! கூட்டுறவு துறை பயிர்க் கடன் ரூ.3700 கோடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த, 2021 ஜனவரி நிலவரப்படி, 16.43 லட்சம் விவசாயிகள் பெற்றிருந்த, 12,110 கோடி ரூபாய் பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்து, தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது..

அதேபோல கூட்டுறவுத்துறை சார்பில் விவசாயிகள் இணைய வழியில் விண்ணப்பித்த தினத்தன்றே பயிர்க்கடனை பெறும் திட்டத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.. இந்நிலையில், விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க கூட்டுறவுத்துறைக்கு ரூ.3,700 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக குட்நியூஸ் ஒன்று வெளியாகியிருக்கிறது.

Crop Loan cooperative sector nabard BANK

விவசாயிகள் - வேளாண் துறை

நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, வேளாண் துறையில், தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவி வருவதால், இவைகளை களைய, அரசும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.. விவசாயிகளின் நலனுக்காகவே, பல அறிவிப்புகள், சலுகைகளை அறிவித்து வருகிறது.

முக்கியமாக, குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசு குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறிவித்துள்ளது.

அதேபோல, தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் பல்வேறு கூட்டுறவு வங்கிகளும், தொடக்க வேளாண் உள்ளிட்ட கூட்டுறவு கடன் சங்கங்களும் பயிர்க் கடன், நகைக்கடன் உள்ளிட்ட பலவகை கடன்களை தாராளமாக வழங்கி வருகின்றன..

கூட்டுறவு சங்கங்கள்

தமிழகம் முழுவதிலும், 119 நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வரும் நிலையில், 56 சங்கங்கள் தன்னுடைய எல்லைக்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு, பயிர் கடன் உள்ளிட்ட வேளாண் கடன்களை வழங்கி வருகின்றன.

கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு வங்கிகள் மற்றும் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு மிகக்குறைந்த வட்டியில் இந்த பயிர்க்கடனை வழங்கி வருகிறது. சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள், இடுபொருட்கள், வேளாண் கருவிகள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்காகவே இப்பயிர் கடன் வழங்கப்பட்டு வருகிறது.

விவசாயிகள் மகிழ்ச்சி

மேலும், பயிர்க்கடனில் 30 சதவீதம் புதிய உறுப்பினர்களுக்கும், 20 சதவீதம் பட்டியலின வகுப்பு விவசாயிகளுக்கும் வழங்கி வருகிறது. 7 சதவீத வட்டியில் பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம், உரிய காலத்தில் கடனை திருப்பி செலுத்தும் விவசாயிகள் இந்த வட்டியை செலுத்த வேண்டியதில்லை.

ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களின்படி ரூ.2 லட்சம் வரை பிணையம் இல்லாமலும், ரூ.3 லட்சம் வரை பிணையம் பெற்றும் பயிர்க் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பயிர்க்கடனானது ரொக்கம், பொருள் பகுதியான உரங்கள், பூச்சிக் கொல்லிகள் மற்றும் விதைகள் போன்றவற்றை உள்ளடக்கியதாகும்.


முதல்முறையாக சாதனை

எனவேதான், கூட்டுறவுத்துறையின் வரலாற்றிலேயே முதல்முறையாக கடந்த 2023-24-ம் நிதியாண்டில் ரூ.15 ஆயிரத்து 543 கோடி பயிர்க்கடன் வழங்கி சாதனை படைக்கப்பட்டுள்ளது.. 2024-25ம் நிதியாண்டிலும், ரூ.17 லட்சத்து 37460 விவசாயிகளுக்கு ரூ.15692 கோடி வழங்கப்பட்டது.

அந்தவகையில், நடப்பு 2025-26 நிதியாண்டுக்கும் ரூ.17 ஆயிரம் கோடி பயிர்க்கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளால் பயிர்க்கடனும் வழங்கப்பட்டு வருகிறது... அந்த வகையில் கடந்த ஆகஸ்டு மாதம் வரை ரூ.4 ஆயிரம் கோடி அளவிற்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளதாக மகிழ்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.

நபார்டு வங்கி தாராளம்

இதுகுறித்து கூட்டுறவுத்துறை அதிகாரிகள் சொல்லும்போது, இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வழங்கப்பட்ட பயிர்க்கடனைவிட ரூ.500 கோடி கூடுதலாகும்... இந்த பயிர்க்கடன்கள் வழங்குவதற்கு, கூட்டுறவுத்துறை சார்பில் தேசிய விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கியிடம் (நபார்டு வங்கி) இருந்து குறைந்த வட்டிக்கு ரூ.8 ஆயிரம் கோடி கடனுதவி ஏற்கனவே கோரப்பட்டிருந்தது.

இதற்கு நபார்டு வங்கியானது ரூ.3700 கோடியை கூட்டுறவுத்துறைக்கு கடந்த வாரம் கடனாக விடுவித்துள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+