ஆஹா! தொழிலே வித்தியாசமா இருக்கே! யார் இந்த பள்ளி க்ரஷ்? சிஎஸ்கே துஷார் தேஷ்பாண்டே நிச்சயத்தார்த்தம்
சென்னை: ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பவுலராக விளையாடி அசத்திய துஷார் தேஷ்பாண்டே தனது பள்ளி பருவ ‛க்ரஷ்' நபா கட்டம்வாருடன் திருமண நிச்சயத்தார்த்தம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் தான் நபா கட்டம்வார் பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் அவர் செய்யும் தொழில் ரொம்ப வித்தியாசமானதாக உள்ளது.
நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இதையடுத்து சிஎஸ்கேவின் நட்சத்திர பேட்ஸ்மேனும், தொடக்க ஆட்டக்காரருமான ருதுராஜ் கெய்க்வாட் சமீபத்தில் திருமணம் செய்தார்.

ருதுராஜ் கெய்க்வாட் கடந்த 3ம் தேதி தனது காதலி உத்கர்ஷா பவாரை திருமணம் செய்து கொண்டார். உத்கர்ஷா பவாரும் ஒரு கிரிக்கெட் வீராங்கனை ஆவார். மகாராஷ்டிராவை சேர்ந்த அவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் தனது மாநில அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்த வரிசையில் தான் தற்போது சிஎஸ்கே அணியில் விளையாடிய துஷார் தேஷ்பாண்டேவுக்கு திருமண நிச்சயத்தார்த்தம் நடந்து முடிந்துள்ளது. தனது பள்ளி கால க்ரஷான நபா கட்டம்வாருடன், துஷார் தேஷ்பாண்டேவுக்கு நிச்சயத்தார்த்தம் நடந்துள்ளது. இதுதொடர்பான படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துஷார் தேஷ்பாண்டே பதிவிட்டுள்ளார்.
மேலும் அந்த படத்தின் அருகே, "எனது பள்ளி கால க்ரஷ்ஷாக இருந்தவர் வருங்கால மனைவியாக புரொமோட் ஆகியுள்ளார்" என குறிப்பிட்டு நிச்சயத்தார்த்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். திருமண பந்தத்தில் இணைய உள்ள துஷார் தேஷ்பாண்டே மகாராஷ்டிராவை சேர்ந்தவர். இவருக்கு வயது 28. இந்நிலையில் தான் துஷார் தேஷ்பாண்டேவின் வருங்கால மனைவி நபா கட்டம்வார் பற்றிய சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதன்படி நபா கட்டம்வார் மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள கல்யாண் என்ற இடத்தில் பிறந்தார். இவர் 10ம் வகுப்பு வரை சொந்த ஊரில் படித்தார். அதன்பிறகு 12ம் வகுப்பு வரை மும்பையில் பயின்றார். அதன்பிறகு அவர் டிப்ளமோ ‛ஆர்ட்ஸ் டீச்சிங் ஸ்டடீஸ்' (Arts Teaching Studies)என்ற படிப்பை முடித்தார். தற்போது நபா கட்டம்வார் ஒரு ஆர்ட்டிஸ்ட் ஆவார். இவர் ஆர்ட்ஸ் இன்ஸ்ட்ரக்டராகவும் செயல்பட்டு வருகிறார். மேலும் தனது கைகளால் வித்தியாசமான பெயிண்ட்டிங்குகளை வரைந்து விற்பனை செய்து வருகிறார். இதற்காக அவர் இன்ஸ்ட்டாகிராமில் Painted Palette என்ற தனி அக்கவுண்ட்டை பயன்படுத்தி வருகிறார்.
முன்னதாக, 2022 ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணியால் அடிப்படை விலையான ரூ.20 லட்சத்துக்கு துஷார் தேஷ்பாண்டே வாங்கப்பட்டார். அந்த சீசனில் வெறும் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். இதைத்தொடர்ந்து நடந்து முடிந்த ஐபிஎல் 2023 சீசனில் சிஎஸ்கே அணியின் முக்கிய பவுலராக ஜொலித்த தேஷ்பாண்டே அனைத்து போட்டிகளிலும் விளையாடி 21 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் சிஎஸ்கே அணியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற பெயரை பெற்ற துஷார் தேஷ்பாண்டே சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்த வீரர்களில் ஒருவர் என்றால் மிகையல்ல.












Click it and Unblock the Notifications