டெஸ்ட் பேட்டிங்கை விடுங்க.. தெரிஞ்சே தோனி செய்த "அந்த" தவறு.. ரொம்ப தப்பு.. கொதிக்கும் விமர்சகர்கள்
சென்னை: டெல்லி அணிக்கு எதிராக இன்று சிஎஸ்கே கேப்டன் தோனியின் பேட்டிங் சொதப்பியது விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அதுமட்டுமின்றி, கேப்டனாக அவர் எடுத்த முடிவு ஒன்றும் விமர்சனங்களை சந்தித்துள்ளது.
சிஎஸ்கே அணியில் நீண்ட நாட்களாகவே இருந்த பிரச்சனை மிடில் ஆர்டர் பேட்டிங். கடந்த சீசனிலேயே இந்த மிடில் ஆர்டர் பிரச்சனை இருந்தது. இந்த சீசனில் தொடக்கத்தில் மொயின் அலி, ராயுடு சில போட்டிகளில் நன்றாக ஆடினார்கள்.
மற்ற போட்டிகளில் எல்லாம் சிஎஸ்கே அணிக்காக நன்றாக ஆடியது என்றால் ஒப்பனர்கள்தான். முக்கியமாக ருத்துராஜ்தான் கிட்டத்தட்ட எல்லா போட்டிகளிலும் சிஎஸ்கே அணியை கரை சேர்த்தார்.

ஓப்பனர்
சிஎஸ்கே அணியில் ஓப்பனிங் சொதப்பினால் என்ன ஆகும் என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக இருந்தது. ருத்துராஜ், டு பிளசிஸ் இருவரும் அவுட்டானால் யார் சிஎஸ்கே அணியை கரை சேர்ப்பார்கள் என்ற கேள்வி இருந்தது. மொயின் அலியை எப்போதும் நம்ப முடியாது. ரெய்னா பார்மில் இல்லை. தோனி பார்மில் இல்லை. ராயுடு பெரும்பாலான நேரங்களில் சிஎஸ்கேவை காப்பாற்றி இருக்கிறார்.

பிராவோ
ராயுடு, பிராவோ, ஜடேஜா அடித்தால்தான் உண்டு என்ற நிலை இருந்தது. மிடில் ஆர்டரில் தோனி, ரெய்னா இருவருமே சரியாக ஆடுவது இல்லை. இந்த நிலையில்தான் ஓப்பனிங் சொதப்பினால் சிஎஸ்கே அணி என்ன செய்யும் என்ற கேள்வி ரசிகர்கள் இடையே இருந்தது. அந்த கேள்விக்கான பதில் இன்று கிடைத்தது. டெல்லிக்கு எதிரான போட்டியில் ருத்துராஜ் 13, டு பிளசிஸ் 10 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார்கள்.

அவுட்
இதனால் சிஎஸ்கே முழுக்க முழுக்க மிடில் ஆர்டரை நம்பி இருந்தது. ஆனால் மிடில் ஆர்டரில் வரிசையாக உத்தப்பா, மொயின் அலி அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர். அதன்பின் இறங்கிய தோனி, ராயுடு ஜோடி நிதானமாக ஆடினார்கள். ஒரு பக்கம் ராயுடு நம்பிக்கை அளித்தாலும் அவர் ஒன் டே இன்னிங்ஸ் போல ஆடினார். கடைசி ஓவர் வரை நின்றவர் 127.ஸ்டிரைக் ரேட்டில் 43 பந்தில் 55 ரன்கள் எடுத்தார்.

தோனி
ஆனால் தோனி ஆமை வேகத்தில் மிக மிக மெதுவாக டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடினார். 27 பந்துகள் பிடித்தவர் 18 ரன்கள் மட்டுமே எடுத்தார். இவரின் ஸ்டிரைக் ரேட் வெறும் 66.67தான். ஆம் டெஸ்ட் இன்னிங்ஸ் ஆட்டங்களை விட மோசமான ஆடினார். இதனால் சிஎஸ்கே 20 ஓவரில் வெறும் 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. தோனி கடந்த சீசனில் இருந்தே சரியாக பேட்டிங் செய்வது இல்லை. இன்று அவரின் டெஸ்ட் இன்னிங்ஸ் பார்த்து.. இன்னா தல என்று சிஎஸ்கே ரசிகர்களே கோபம் அடையும் நிலை ஏற்பட்டது. ஆனால் தோனியின் டெஸ்ட் இன்னிங்க்ஸை விட அவர் செய்த வேறு ஒரு காரியம்தான் அதிகம் விமர்சனங்களை சந்தித்தது.

ஸ்பின்
பொதுவாக தோனி ஸ்பின் பவுலிங்கில் சரியாக ஆட கூடியவர். முக்கியமாக அக்சர், அஸ்வின் போன்ற பவுலர்கள் ஓவர்களில் கடுமையாக திணறுவார். இன்றும் கூட தோனி இறங்கிய போது அஸ்வின், அக்சர் ஆகியோர் அதிக ஓவர்கள் மீதம் இருந்தது. ஒருவேளை இன்று தோனி தாமதமாக இறங்கி இருந்தால் ஸ்பின் பவுலிங்கை தவிர்த்துவிட்டு நன்றாக ஆடி இருப்பார். ஆனால் வேண்டும் என்றே அவர் மிடில் ஆர்டரில் இறங்கினார்.

விமர்சனம்
தோனி இப்படி 6வது பேட்ஸ்மேனாக இறங்கியதுதான் அவர் செய்த அந்த தவறு. இதுதான் விமர்சனங்களை சந்தித்துள்ளது. தோனி பார்மில் இல்லை. களத்தில் ஸ்பின் பவுலர்கள் இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது தோனி தனக்கு முன்பாக ஜடேஜாவை இறக்கிவிட்டு இருக்க வேண்டும். இல்லையென்றால் பிராவோவை இறக்கிவிட்டு இருக்க வேண்டும். அப்படி இறக்கும் போது தோனி ஸ்பின் பவுலர்கள் களத்தில் இருக்கும் போது பேட்டிங் இறங்கியது பெரிய தவறு என்று கிரிக்கெட் விமர்சகர் ட்வீட்டரில் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

மோசமான பேட்டிங்
தோனி ஸ்பின் பவுலிங்கில் சொதப்பி 27 பந்துகளை வேஸ்ட் செய்துவிட்டார். இது தவறு. நல்ல ஸ்டிரைக் ரேட்டில் ஆட கூடிய ஜடேஜா, பிராவோ போன்றவர்களை அவர் தனக்கு முன்பாக களமிறக்கி இருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு முன்பாக தோனி களமிறங்கியது தவறு என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. தோனியின் சமீபத்திய இந்த பேட்டிங் பார்ம் காரணமாக அவரை ஓய்வுபெற வேண்டும் என்றும் ரசிகர்களே கோரிக்கை வைக்க தொடங்கி உள்ளனர்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications