தோனி மட்டும் இதை பண்ணா மேட்சே மாறும்.. 4 இம்பாக்ட் வீரர்கள்.. சிஎஸ்கே களமிறக்கும் அசாத்திய யுக்தி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாளை நடக்க உள்ள ஐபிஎல் ஆட்டத்தில் இம்பாக்ட் பிளேயர் விதியை சிஎஸ்கே அணி எப்படி பயன்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சிஎஸ்கே குஜராத் அணிகளுக்கு இடையிலான முதல் ஐபிஎல் போட்டி நாளை நடக்க உள்ளது. அஹமதாபாத் மைதானத்தில் முதல் போட்டி கோலாகலமாக துவங்க உள்ளது.

இந்த ஐபிஎல் தொடரில் இம்பாக்ட் பிளேயர் விதி கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த விதிப்படி ஆட்டத்தின் ஒரு பகுதியில் வீரரை மாற்றிக்கொள்ள முடியும். உதாரணமாக முதல் இன்னிங்சில் ஒரு அணி பேட்டிங் செய்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த அணி இரண்டாவது இன்னிங்சில் பவுலிங் செய்யும் போது ஒரு பேட்ஸ்மேனை தூக்கிவிட்டு கூடுதலாக ஒரு பவுலரை கொண்டு வர முடியும். உதாரணமாக சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்கிறது. ருத்துராஜ் நன்றாக ஆடி 100 அடிக்கிறார்.

பவுலிங்

பவுலிங்

அவர் சிறப்பாக ஆடினாலும் கூட பவுலிங் செய்ய மாட்டார். இரண்டாவது இன்னிங்சில் அவர் பவுலிங் செய்யாமல் பீல்டிங் மட்டும் செய்வதில் பலன் இல்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் அவருக்கு பதில் கூடுதல் ஒரு முழுநேர பவுலர் களமிறக்கப்பட்டார் என்றால் எப்படி இருக்கும். இந்த வசதியைத்தான் இம்பாக்ட் பிளேயர் விதி கொண்டு வந்துள்ளது. இனி எல்லா அணிகளும் 11 வீரர்களை கொண்ட அணி + 1 வீரரை மனதில் வைத்து இருக்கும். பேட்டிங் செய்யும் போது கூடுதலாக அதிக பேட்ஸ்மேன் கொண்ட ஒரு அணி இருக்கும். அதன்பின் பவுலிங் செய்யும் போது ஒரு பேட்ஸ்மேனை நீக்கிவிட்டு அவருக்கு பதில் ஒரு பவுலரை சேர்க்கும்.

முதலில் பவுலிங்

முதலில் பவுலிங்

அதுவே முதலில் பவுலிங் செய்கிறார்கள் என்றால் ஒரு முழு நேர பவுலரை கூடுதலாக களமிறக்கி ஆடுவார்கள். அதன்பின் பேட்டிங்கில் அவரை நீக்கிவிட்டு கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை கொண்டு வருவார்கள். இதனால் இந்த ஐபிஎல் தொடரே மிகவும் வித்தியாசமே இருக்க போகிறது. அந்த வகையில் சிஎஸ்கே வட்டாரத்தில் விசாரித்தத்தில் சிஎஸ்கே அணி 4 இம்பாக்ட் வீரர்களை மனதில் வைத்துள்ளது. டாஸை பொறுத்து இதில் ஒருவரை சிஎஸ்கே பயன்படுத்தும் என்று கூறப்படுகிறது.

 எப்படி?

எப்படி?

அதன்படி ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், சிசண்டா மகலா, துபே, ரஹானே ஆகிய நான்கு பேர்களை தோனி மனதில் வைத்து இருக்கிறாராம். இதை பின்வருமாறு விளக்கலாம். இப்போது சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவனில் கான்வே, ருத்துராஜ், தோனி, ராயுடு, மொயின் அலி, ஜடேஜா, ஸ்டோக்ஸ், பிரிட்டோரியஸ், சாகர், முகேஷ் சவுத்திரி, மகேஷ் தீக்சனா ஆகியோர் ஆடுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். சிஎஸ்கே டாஸ் வென்று பவுலிங் செய்தால், முகேஷ் சவுத்திரி, மகேஷ் தீக்சனா ஆகிய பவுலர்கள் பவுலிங்செய்வார்கள்.

பவுலிங்

பவுலிங்

ஆனால் பவுலிங் முடிந்து பேட்டிங் வரும் போது இவர்கள் இருவரில் ஒருவர் நீக்கப்பட்டு அந்த ஒருவருக்கு பதிலாக ரஹானே அல்லது துபே ஆகியோரில் ஒருவர் களமிறக்கப்படலாம். இதன் மூலம் அணிக்கு ஒரு பேட்டிங் கூடுதலாக கிடைக்கும். ஒருவேளை சிஎஸ்கே அணி பேட்டிங் செய்கிறது என்று வைத்துக்கொள்வோம். அது போன்ற நேரங்களில் சிஎஸ்கே அணி நேரடியாக கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் கொண்ட அணியை அறிவிக்கும். உதாரணமாக, கான்வே, ருத்துராஜ், தோனி, ராயுடு, மொயின் அலி, ஜடேஜா, ஸ்டோக்ஸ், பிரிட்டோரியஸ், சாகர், ரஹானே, மகேஷ் தீக்சனா அணியை அறிவிக்கும்.

பவுலிங் மாறும்

பவுலிங் மாறும்

இந்த அணி பேட்டிங் செய்த பின் பவுலிங்கில் ரஹானே நீக்கப்பட்டு ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் அல்லது சிசண்டா மகலா ஆகிய பவுலர்களில் ஒருவர் சேர்க்கப்படலாம். இதன் மூலம் சிஎஸ்கே அணிக்கு பவுலிங்கில் கூடுதலாக ஒரு நல்ல பவுலர் கிடைப்பார். ஐபிஎல்லில் இந்த விதி என்பது பொன் முட்டை போடும் வாத்து. இதை மட்டும் சிஎஸ்கே, தோனி ஆகியோர் சரியாக பயன்படுத்தும் பட்சத்தில் அணியின் தோற்றமும், ரிசல்ட்டும் மாறும். 2020 சமயங்களில் இந்த ரூல் இருந்திருந்தால்.. ஜாதவ் போன்றவர்களை வைத்து சிஎஸ்கே கஷ்டப்பட்டு இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+