மத்திய அரசு நிதி தரலைனா என்ன? ஸ்டாலினுக்கு ரூ.10,000 அனுப்பிய கடலூர் எல்கேஜி சிறுமி! வெளியான வீடியோ
சென்னை: மும்மொழி கொள்கையை ஏற்காததால் தமிழக அரசுக்கான நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இப்படியான சூழலில் தான் மத்திய அரசு நிதி தராவிட்டால் என்ன நான் தருகிறேன் என்று கடலூரை சேர்ந்த எல்கேஜி மாணவி நன்முகை, முதல்வர் ஸ்டாலினுக்கு ரூ.10 ஆயிரம் அனுப்பி வைத்து வீடியோ வெளியிட்டு இருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக பள்ளி கல்வித்துறைக்கு மத்திய அரசு சார்பில் பல்வேறு திட்டங்களில் நிதி என்பது ஒதுக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு தர வேண்டிய ரூ.2,152 கோடியை மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை.

முதல்வர் ஸ்டாலின் உள்பட பள்ளிக்க கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கேட்டும் மத்திய அரசு வழங்காமல் உள்ளது.
தேசிய கல்வி கொள்கையின்படி மும்மொழி கொள்கையை அமல்படுத்தினால் மட்டுமே அந்த நிதி விடுவிக்கப்படும். இல்லாவிட்டால் தமிழகத்துக்கான ரூ.2,152 கோடி நிதி விடுவிக்கப்படாது என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெளிவாக கூறிவிட்டார்.
இந்த விஷயத்தில் தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே பஞ்சாயத்து வெடித்துள்ளது. புதிய கல்வி கொள்கையின் மூலம் மும்மொழி திட்டத்தின் வழியாக தமிழகத்தில் இந்தியை மத்திய அரசு திணிக்க நினைக்கிறது. இதற்கு இடம் அளிக்கமாட்டோம் என்று தமிழக அரசு கூறி வருகிறது. அதேபோல் 3வது மொழியாக இந்தி தான் இருக்க வேண்டும் என்பது இல்லை. இந்தியாவில் உள்ள ஏதாவது ஒரு மொழியை மாணவ-மாணவிகள் தேர்வு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தான் கடலுார் மாவட்டத்தில் பெற்றோர்களைக் கொண்டாடுவோம் விழாவில், அப்பா எனும் புதிய செயலியை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு பேசினார். அப்போது முதல்வர் ஸ்டாலின், ‛‛மாணவர்களை பள்ளியில் இருந்து விரட்டுகிற கொள்கை தான் புதிய கல்வி கொள்கை. இதனை பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் உணர்த்தி இருக்கிறோம். புதிய கல்வி கொள்கையை ஏற்க மாட்டோம் என்று சொல்கிறோம்.
இந்த திட்டத்தில் கையெழுத்து போட்டால் தான் ரூ.2 ஆயிரம் கோடி கிடைக்கும். அவர்கள் பத்தாயிரம் கோடி கிடைக்கும் என்று சொன்னாலும் நாங்கள் கையெழுத்து போட மாட்டோம். ரூ.2 ஆயிரம் கோடி பணத்திற்காக இன்றைக்கு நாங்கள் கையெழுத்து போட்டால் என்னவாகும்? இரண்டாயிரம் ஆண்டுக்கு பின்னோக்கி நமது தமிழ் சமுதாயம் போய்விடும். அந்த பாவத்தை நான் ஒருபோதும் செய்யமாட்டேன்'' என்று கூறியிருந்தார்.
இப்படி மாறிமாறி இருதரப்பும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. இந்நிலையில் தான் மத்திய அரசு நிதி தராவிட்டால் என்னால் நான் தருகிறேன் என்று கடலூரை சேர்ந்த எல்கேஜி மாணவி நன்முகை ரூ.10ஆயிரம் வழங்கி உள்ளார். இதற்கான காசோலையை முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ளார். இதுதொடர்பாக மாணவி நன்முகை பேசும் வீடியோ வெளியாகி உள்ளது. அதில் மாணவி நன்முகை, ‛‛மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் அய்யாவுக்கு வணக்கம். நான் எல்கேஜி படிக்கிறேன்.
இன்று நீங்கள் கடலூரில் பேசியபோது மத்திய அரசு 2 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசு நமக்கு தரவில்லை என்று கூறினீர்கள். தமிழ்மொழியை காக்க பாடுபடுவேன் என்றும் கூறினீர்கள். எனது பாலு தாத்தா, சாந்தி பாட்டி, இருவரும் தமிழ் ஆசிரியர்கள். அதனால் மத்திய அரசு தரவேண்டிய பணத்தை நான் உங்களுக்கு எனது பங்களிப்பாக 10 ஆயிரம் ரூபாய் அனுப்பி வைக்கிறேன். கடலூரில் இருந்து நன்முகை. வணக்கம் அய்யா'' என்று கூறியுள்ளார்.
-
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
"தவெக ஆட்சி 6 மாதம் இல்லை.. 3 மாதமாவது தாங்குமா?" - முன்னாள் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
அதிசயத்த பாருங்களேன்.. ஜெயா டிவில ஸ்டாலின் லைவ்! வெளியேறிய விவேக்! உள்ளே வந்த திவாகரன்! பெரிய சேஞ்ச் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி!












Click it and Unblock the Notifications